சினிமாவை விட்டு விலக கமல் தயார்.. அப்போ ஷங்கர் நிலைமை?
சென்னை : கமலை வைத்து டைரக்டர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை, பிரம்மாண்ட படமாக இயக்கி வந்தார். ஆனால் கிரேன் விபத்து, கொரோனா பரவல், லாக் டவுன், கமலின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்தடுத்து தள்ளிப் போன படப்படிப்பு மீண்டும் துவங்கப்படவே இல்லை.
ஒரு வழியாக லாக்டவுன் முடிந்து, படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்ததும் 'இந்தியன் 2' சூட்டிங்கை மீண்டும் துவக்கலாம் என ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியதால், சினிமா வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு, கட்சி வேலைகள், பிரச்சாரம் என சென்று விட்டார் கமல்.
தேர்தல் முடியும் வரை கமலை பிடிக்க முடியாது என நினைத்த ஷங்கர்,' இந்தியன் 2' வேலைகளை ஓரங்கட்டி விட்டு, அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்களை வெளியிட துவங்கினார். ராம் சரணின் 15 வது படம், 'அந்நியன்' இந்தி ரீமேக் என பல அறிவிப்புக்கள் எடுத்தடுத்து வந்தன. இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஷங்கர் பிஸி என்ற நிலை உருவானது.

கடுப்பான லைக்கா
ஷங்கரின் அடுத்தடுத்த புதிய படங்களின் அறிவிப்பால் கடுப்பான லைக்கா நிறுவனம், ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்தது. 'இந்தியன் 2' படத்திற்காக ஏற்கனவே ரூ.180 கோடி செலவிட்டிருப்பதாகவும், ஷங்கருக்கு பேசிய சம்பளத்தில் ரூ. 14 கோடி வரை ஏற்கனவே கொடுத்து விட்டதாகவும் கூறியது.

ஷங்கருக்கு தடை போடணும்
ஷங்கரின் சம்பளத்தில் மீதமுள்ள தொகையை கோர்ட்டில் செலுத்தி விடுகிறோம். ஆனால் 'இந்தியன் 2' படத்தை முடிக்கும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் லைக்கா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஷங்கர் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது என கோர்ட் தான் வழக்கை நிறுத்தி வைத்துள்ளது.

கமல் ஓகே சொல்லணுமே
கோர்ட் தடை விதிப்பதில் இருந்தும், லைக்கா பிரச்சனையில் இருந்தும் தப்பிக்க 'இந்தியன் 2' பட வேலைகளை எப்படியாவது மீண்டும் துவங்கி, எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க ஷங்கர் யோசித்து கொண்டிருந்தார். இதற்கு கமல் கால்ஷீட் தர வேண்டுமே...என்ன செய்யலாம் என்ன ஷங்கர் ஆலோசித்து வந்தார்.

குண்டை தூக்கி போட்ட கமல்
அதற்குள் நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், "அரசியலுக்கு தடையாக இருந்தால் சினிமாவை விட்டு விலக தயார் "என கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்து கொடுத்து விட்டு, தீவிர மக்கள் பணி ஆற்ற போவதாக கூறி உள்ளார்.

கமல் முடிவிற்காக காத்திருப்பு
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதில் கமல் மற்றும் அவரது கட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவு தெரிந்த பிறகு தான் தீவிர அரசியலா அல்லது தீவிர சினிமாவா என்பதை கமல் முடிவு செய்வார். அதுவரை லைக்கா நிறுவனம் பொறுமை காக்குமா என தெரியவில்லை. இதனால் என்ன செய்வதென தெரியாமல் ஷங்கர் திணறி வருகிறார்.

அதிர்ந்து போன தயாரிப்பாளர்கள்
கமலின் நேற்றைய பேச்சால் அதிர்ந்து போய் இருப்பது ஷங்கர் மட்டுமல்ல, கமலை ஹீரோவாகவும், லாரன்சை வில்லனாகவும் வைத்து 'விக்ரம்' படத்தை எடுக்க முடிவு செய்த படக்குழு, ஜூன் மாதத்தில் துவங்கப்பட உள்ள 'பிக்பாஸ்' நிகழ்ச்சி குழு என அனைவரும் தான். தேர்தல் முடிவிற்கு பிறகு தான் 'பிக்பாஸ் சீசன் 5' ஐ கமல் தொகுத்து வழங்குவாரா என்பது தெளிவாக தெரியும்.
Recommended Video

ஷங்கருக்கு நேரம் சரியில்ல போல
ஏற்கனவே வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இம்சை அரசன் 24 ம் புலிகேசி' படத்தை ஷங்கர் தயாரித்தார். ஆனால் அதிலிருந்து வடிவேலு பாதியிலேயே விலகியதால், வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடும் நிலை வந்து, அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதற்கு பிறகு துவக்கிய 'இந்தியன் 2' படமும் பாதியில் நிற்பதுடன், வழக்கு வரை போய் உள்ளது. 2018 ம் ஆண்டு ரிலீசான 'எந்திரன் 2.0' படத்திற்கு பிறகு எந்த படமும் ஷங்கருக்கு கைகொடுக்கவில்லை. ஏற்கனவே வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இம்சை அரசன் 24 ம் புலிகேசி' படத்தை ஷங்கர் தயாரித்தார். ஆனால் அதிலிருந்து வடிவேலு பாதியிலேயே விலகியதால், வடிவேலுவுக்கு ரெட் கார்ட் போடும் நிலை வந்து, அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதற்கு பிறகு துவக்கிய 'இந்தியன் 2' படமும் பாதியில் நிற்பதுடன், வழக்கு வரை போய் உள்ளது. 2018 ம் ஆண்டு ரிலீசான 'எந்திரன் 2.0' படத்திற்கு பிறகு எந்த படமும் ஷங்கருக்கு கைகொடுக்கவில்லை.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications