Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகாலயா சோனம் போல் சென்னை வித்யா! மூணாறுக்கு தேனிலவு சென்று கணவரை கொன்றதை மறக்க முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற கணவரை புது மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 19 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையையே கதிகலங்க மூணாறில் நடந்த தேனிலவு கொலை குறித்து விரிவாக பார்க்கலாம்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (30). இவருக்கு சோனம் (27) என்பவருடன் மே 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் மே 20ஆம் தேதி இருவரும் மேகாலயாவின் காசி ஹில்ஸுக்கு ஹனிமூன் சென்றனர்.

crime indore meghalaya

வாடகை ஸ்கூட்டரில் ஊரை சுற்றி பார்த்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி விடுதியை காலி செய்த இவர்களது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீஸுக்கு போன நிலையில் ராஜா சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீஸ் நிலையம் வந்த சோனம், தனது கணவரை யாரோ கட்டிப்போட்டுவிட்டு தன்னை கடத்தி விட்டதாகவும் அவர்களிடம் இருந்து தான் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் சோனம் சொல்வதில் போலீஸாருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

இதையடுத்து விசாரிக்க வேண்டிய விதத்தில் கேட்ட போதுதான் சோனம், திருமணத்திற்கு முந்தைய காதலை மறக்க முடியாமல் தனது கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இந்த விவகாரத்தில் சோனம் உள்பட 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ள நிலையில் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேனிலவு கொலையால் தமிழகம், கேரளாவே அதிர்ந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.

சென்னை பம்மலைச் சேர்ந்தவர் வித்யா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அனந்தராமனுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜூன் 16ஆம் தேதி தேனிலவுக்காக மூணாறு சென்றனர்.

இந்த நிலையில் தேனிலவுக்குச் சென்ற 2 நாட்களில் அனந்தராமன் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வித்யாவிடம் விசாரித்த போது, கணவரை தாக்கி கொலை செய்துவிட்டு தனது நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக சொன்னார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அவர் சொன்னது பொய் என தெரியவந்தது.

ஆட்டோ டிரைவர் ஆனந்த், அவரது நண்பர் அன்புராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஆனந்தும் வித்யாவும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்களாம். ஆனால் இதற்கு வித்யாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரது விருப்பத்திற்கு மாறாக அனந்தராமனை திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் ஆனந்தை வித்யாவால் மறக்க முடியவில்லை. இதனால் கணவரை தேனிலவுக்கு அழைத்து சென்று தீர்த்து கட்டி விட திட்டம் தீட்டினார். அதன்படி இருவரும் மூணாறுக்கு சென்றனர். அங்கு இவர்கள் தங்கியிருந்த இடம், வெளியே செல்லம் நேரம் உள்ளிட்டவைகளை ஆனந்திடம், வித்யா தெரிவித்தாராம்.

அதன்படி நண்பர் அன்புராஜுடன் வந்த ஆனந்த், வித்யா தங்கியிருந்த விடுதிக்கு அருகே உள்ள மற்றொரு விடுதியில் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று குண்டலா ஏரிக்கு வித்யாவும் அனந்தராமனும் படகு சவாரிக்கு சென்றனர்.

இதை ஆனந்துக்கு எஸ்எம்எஸ் மூலம் வித்யா தெரிவித்தார். அப்போது அங்கு சிறுநீர் கழிக்க சென்ற அனந்தராமனை, ஆனந்தும் அன்புராஜும் சேர்ந்து அடித்து கொன்றனர். பின்னர் தனது நகைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு நகைக்காக மர்மநபர்கள் தனது கணவரை கொன்றுவிட்டதாக வித்யா நாடகமாடினார். இதையடுத்து போலீஸார் , வித்யா, ஆனந்த், அன்புராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் மேகாலயாவில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+