Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்போரூர் ஹவுசிங் போர்டில் அங்கா, தங்கை! இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசி.. தொக்காய் சிக்கிய தினேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்கா, தங்கையான 13 மற்றும் 14 வயது சிறுமிகளை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பாலியல் பலாத்காரம் செய்த இரு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதோடு, அவர்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் அந்த கொடூரர்கள். இதில் ஒரு சிறுமி கர்ப்பாகியுள்ளார் என தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் எப்போதும் மாணவ மாணவிகள் வயது வித்தியாசம் இன்றி செல்போன்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் வந்துவிட்ட பிறகு பலர் அதிலேயே தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

இதனால் பல நேரங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகள் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் தங்கள் வாழ்வையே தொலைத்து பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சம்பவங்களும் ஏராளமாக உள்ளன.

POCSO Case in Chengalpattu

இன்ஸ்டாகிராம்

அப்படி ஒரு சம்பவம் தான் செங்கல்பட்டில் அரங்கேறி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இருவர் சிறுமிகளை ஆசை வார்த்தை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அதில் ஒரு சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அளித்த புகாரின் பேரில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அக்கா தங்கையான இரு சிறுமிகளையும் அந்த இருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கூறி அதிர வைக்கின்றனர் போலீசார்.

பாலியல் வன்கொடுமை

செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரால் கைவிடப்பட்டதையடுத்து 13 மற்றும் 14 வயது மகள்களுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தாயுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சிறுமிகள் இருவரும் கூடுவாஞ்சேரியில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கியிருந்தனர். அங்கு உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த அவர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக இரு இளைஞர்களுடன் நட்பை வளர்த்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. அவர்களில் ஒருவரான தினேஷ், கீரப்பாக்கம் ஊராட்சியின் முருகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை

மற்றொருவர் ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் தினேஷ். இந்த இருவரும் சிறுமிகளை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து திருப்போரூர் அருகே காயாறு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கட்டிடத்துக்குள் அழைத்து சென்று மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சிறுமிகளை மிரட்டி அடிக்கடி காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதன் விளைவாக சிறுமிகளில் ஒருவர் கர்ப்பமானது. இதை அறிந்த தாயார் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணை

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இருவரது செல்போன்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கா தங்கையான இரு சிறுமிகளிடம் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+