சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி!
சென்னை: தமிழகத்தின் சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவில் 4 திருத்தங்கள் செய்யக் கோரி ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா சட்ட வல்லுனர்கள் மூலம் திருத்தம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஆளுநர் ஆர் என் ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்
தமிழக பட்ஜெட் அறிவிக்கும் போது சென்னையில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமையும் என்று அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.
அந்த தீர்மானத்தில் தமிழ்நாட்டில் ஒரு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையப்பட வேண்டும். அதற்கு நிர்வாக அலுவலகம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மாதவரம் பகுதியில் உள்ள பால்பண்ணைக்கு சொந்தமான இடத்தில், ஒரு 25 ஏக்கர் பரப்பளவில் இந்த சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி
இந்த மசோதாவை ஒரு மாத காலத்திற்கு வைத்து விட்டு பின்னர் திரும்பவும் தமிழ்நாடு அரசுக்கே 25.7.2022 அன்று அனுப்பிவிட்டார். திருப்பி அனுப்பிய உடனேயே அதற்கான காரணங்களை கேட்டாரோ, அதற்கான காரணங்களை சட்ட வல்லுனர்கள் மூலமாக விளக்கி மீண்டும் ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் ஆர் என் ரவி, 2022 செப்டம்பர் மாதம் சித்த பல்கலைக்கழக மருத்துவ மசோதாவில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பிவிட்டார். அவர் கோரியிருந்த திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. 2025 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று இந்த மசோதா திருப்பி அனுப்பப் பட்டது.
மீண்டும் 4 திருத்தங்கள் செய்யக் கோரி
ஆளுநருக்கு அனுப்பிய பிறகு கடந்த 4 மாதங்களாக கையில் வைத்துவிட்டு, 21.08.2025 அன்று மீண்டும் 4 திருத்தங்களை செய்து மீண்டும் சட்டமன்றத்தில் வைத்து அனுப்புங்கள் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா சட்ட வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 4 திருத்தங்களை கூறி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள இந்த மசோதா சட்ட வல்லுனர்கள் மூலம் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications