மேகத்தில் கலந்த உலோகம்.. அப்படியே மழையாக கொட்டும் சில்வர், டைட்டானியம்.. எங்கே தெரியுமா?
சென்னை: பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக அதிகமாக ஒளியை பிரதிபலிக்க கூடிய கிரகம் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிக வெப்பமான கிரகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கிரகம் அதிக அளவு ஒளியை பிரதிபலிக்க காரணம் அதில் இருக்கும் சில்வர் போன்ற உலோகம்தான்!
LTT9779 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள அந்த கிரகம் பூமியில் இருந்து 264 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அதாவது இப்போது உங்கள் வீட்டு மாடியில் இருந்து இந்த கிரகம் இருக்கும் திசையை நோக்கி டார்ச் லைட்டை அடித்தால் அந்த ஒளி இந்த கிரகத்தை நோக்கி செல்வதற்கு 264 ஆண்டுகள் ஆகும். அதாவது ஒளி வேகத்தில் சென்றால் இங்கே செல்ல 264 ஆண்டுகள் ஆகும்.

இந்த LTT9779 தனது சூரியனின் வெளிச்சத்தில் 80 சதவிகித வெளிச்சத்தை அப்படியே பிரதிபலிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தற்போது பூமி தனது சூரியனின் 30 சதவிகித ஒளியை மட்டுமே மீண்டும் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த LTT9779 கிரகம் 80 சதவிகிதம் ஒளியை பிரதிபலிக்கும்.
நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் வெள்ளி கிரகம் இதேபோல் வெளிச்சமான கிரகம். அது சூரியனின் வெளிச்சத்தில் 75 சதவிகித வெளிச்சத்தை பிரதிபலிக்கிறது. இதை விட நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் LTT9779 80 சதவிகிதம் வெளிச்சத்தை பிரதிபலிக்கும்.
இந்த கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியது ஆகும். இதன் மேகங்கள் முழுக்க முழுக்க ஹெவி மெட்டல்கள் உள்ளன. அதாவது டைட்டானியம், சில்வர் போன்ற வலிமையான உலோகங்கள் உள்ளன. இந்த மேகங்கள் முழுக்க உலோகங்கள் இருப்பதால் இது முழுக்க முழுக்க அப்படியே அதன் சூரிய ஒளியை திருப்பி பிரதிபலிக்கின்றன.
இந்த கிரகத்தில் 2000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். இதன் காரணமாக அதன் தரை பகுதியில் இருக்கும் உலோகங்கள் உருகி நீராகி மேலே மேகங்களாக இவை பறக்க தொடங்கி உள்ளன. சூரியனின் எதிர் திசைக்கு இவை செல்லும் போது குளிர் வெப்பநிலை காரணமாக அங்கே உலோக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Observatory of Côte d'Azur என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விவியன் பாரிமெண்ட்டர் என்பவர் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
ஏலியன்: மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது தொடங்கி தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் மனித ஆராய்ச்சியின் ஒரு அங்கம்தான்.

பரந்து விரிந்த விண்வெளியில் எங்காவது ஒரு மூலையில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று உலகின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் தொடர் ஆய்வுகளை செய்து வந்தும் இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்க முடியவில்லை.
ஏலியன்கள் என்று வந்துவிட்டாலே உடனே பறக்கும் தட்டும் குறித்தும் மக்கள் பேசுவார்கள். உலகம் முழுக்க யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள், பறக்கும் சாதனங்கள் குறித்து மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. வித்தியாசமான பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக மக்கள் பலர் புகார் வைப்பது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications