வீடு கட்ட எளிய நடைமுறைகள்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள் என்னென்ன தெரியுமா?
சென்னை: வீடு கட்டுவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு எளிமைப்படுத்தி உள்ளது. 2500 சதுர அடி வரை தரைத்தளம் உள்ள வீடு கட்டுவோர் மற்றும் 3500 சதுர அடியில் முதல் தளம் வரை வீடு கட்டுவோர், கட்டடம் கட்ட அனுமதி பெற தேவையில்லை என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதை பற்றி பார்ப்போம்.
புதிய வீடு கட்ட வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். முதல் தலைமுறையாக படித்து முடித்து, சென்னை, பெங்களூர், கோவை போன்ற போன்ற வெளியூர்களில் குடியேறியவர்கள் , குருவி போல் சிறுக சிறுக சேர்த்து தங்களுக்கு என்று சொந்தமாக வீடு கட்ட ஆசைப்படுவார்கள்.. ஆனால் வீடு கட்டுவது என்பது எளிதானது அல்ல.. மிகவும் விலை உயர்ந்த சமாச்சாரம்.. கட்டுமான பொருட்கள் விலை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இப்படியான சூழலில், வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டலாம் என்று தங்கள் கனவை நிறைவேற்ற ஆசைப்படுவோருக்கு அரசுகள் சில சலுகைகள்அறிவிக்கின்றன. அந்த வகையில் பிரதமர் வீடு கட்டும் திட்டம் இருக்கிறது. இதேபோல் இந்த ஆண்டு கலைஞர் வீடு கட்டும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேநேரம் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து, இடம் வாங்கி பெரிய அளவில் வீடு கட்ட பலர் இப்போது போராடி வருகிறார்கள் . அவர்கள் வீடு கட்ட அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளது. அதனை பற்றி பார்ப்போம்.. 2500 சதுர அடி வரை தரைத்தளம் உள்ள வீடு கட்டுவோர் மற்றும் 3500 சதுர அடியில் முதல் தளம் வரை வீடு கட்டுவோர், வீடுகளை கட்ட கட்டட அனுமதி பெற தேவையில்லை.. இத்தகைய கட்டிடங்களுக்கு உடனடியாகப் பதிவு செய்து சுய சான்றிதழ் மூலமாக பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. . 2500 சதுர அடி வரை தரைத்தளம் உள்ள வீடு கட்டுவோர் மற்றும் 3500 சதுர அடியில் முதல் தளம் வரை வீடு கட்டுவோர் கட்டிட முடிவு சான்று பெறவும் அவசியம் இல்லை.
8 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் அளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி குடியிருப்பு நிறைவு சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை.. தரைத்தளத்துடன் இரண்டு தளங்கள் அல்லது தூண் தளம் (Stilt) மற்றும் மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கான பக்கத்திறவிட (setback) அளவுகளில் மாறுதலின்றி உயரக் கட்டுப்பாடு 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டள்ளது.
அதேபோல் மனைப்பிரிவு அனுமதிக்குத் தேவையான அணுகுசாலையின் அகலம் 7 மீட்டர் என்பது கிராமங்களில் 6 மீட்டர், பேரூராட்சிகளில் 6.5 மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனைப்பிரிவுகளில் வீடு வாங்கியோர் கட்டிட அனுமதிபெறுவது எளிதாகி உள்ளது. வீடு கட்ட விரும்புவோருக்கு இந்த திட்டங்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரசின் இந்த அறிவிப்பால் மின் இணைப்பு வாங்குவதும் எளிதாகி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசின் இந்த அறிவிப்பு மாநகர பகுதிகளில் புதிதாக வீடு கட்டுவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.. ஏனெனில் அவர்கள் தான் பல்வேறு சிக்கல சந்தித்து வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications