சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. 500 லி தண்ணீர் பாட்டில்களுடன் நேரில் வந்த பாடகி சின்மயி!
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவை என்றதும், 500 லிட்டர் தண்ணீர் உடன் வந்து அவர்களுக்கு வழங்கினார் பாடகி சின்மயி.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் தூய்மை பணியாளர்கள் ஆறாவது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பிரதிநிதகள் உடன் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் போராட்டக்குழு நிர்வாகிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி தூர்நாற்றம் வீசி வருகிறது. முகப்பேர், நொளம்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குப்பைகளை அருகில் உள்ள காலி இடங்களில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். ரிப்பன் மாளிகையின் முன்பு போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications