ஒற்றைத்தலைமை.. சட்டரீதியாக சமாளிக்க வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை..பொதுக்குழு நடக்குமா?

எடப்பாடி பழனிச்சாமியை சட்டரீதியை சமாளிக்க வழக்கறிஞர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றுக்கொள்ளாததால் பிரச்சினை எழுந்தது. கடந்த மாதம் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருந்தனர். இதனால் ஓ.பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பு சாதகமாக வராததால் மேல்முறையீடு செய்தார்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை

உயர்நீதிமன்றத்தில் விசாரணை

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் பொதுக்குழுவில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்டது. பரபரப்பான சூழ்நிலையில் நடந்த அந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வர முடியாததால் ஒட்டுமொத்தமாக தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

அதற்கு பதிலாக ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க மீண்டும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 2,660 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400 பேருக்கு மேலாக எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். வரும் 11ஆம் தேதியன்று நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி முடிவு செய்யவும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தனி நீதிபதியிடம் முறையீடு

தனி நீதிபதியிடம் முறையீடு

இதனிடையே 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை கேட்டும் முறையிட்டனர். ஆனால் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு டிவிசன் பெஞ்சில் வழக்கு தொடர முடியாது. சம்பந்தப்பட்ட தனி நீதிபதியிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

 டிஜிபி அலுவலகத்தில் மனு

டிஜிபி அலுவலகத்தில் மனு

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பல நெருக்கடிகள் ஏற்பட்டாலும் 11ஆம் தேதி பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். போலீஸ் பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஓபிஎஸ் சட்ட போராட்டம்

ஓபிஎஸ் சட்ட போராட்டம்

அதேநேரம் சட்ட நடவடிக்கை மூலம் அதை முடக்குவதற்கான வேலைகளில் ஓபிஎஸ் தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். பொதுக்குழுவுக்கு தடை கேட்டு தனி நீதிபதியை அணுகுவது தொடர்பாக நேற்று இரவு சட்ட நிபுணர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பொதுக்குழுவுக்கு தடை கேட்டு இன்று வழக்கு தாக்கல் செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தடை கோரி மனு

தடை கோரி மனு

அந்த மனுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எனக்கு நேற்று மாலையில் தான் அழைப்பிதழ் கிடைத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பு விடுக்க வேண்டும் ஆனால் 11ஆம் தேதியன்று பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய முறைப்படி கூட்டப்படாத இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நாளைய தினம் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

 ஓபிஎஸ் ஆலோசனை

ஓபிஎஸ் ஆலோசனை


பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் நாளைய தினம் ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருவதால் 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+