பொதுமக்கள் கவனத்திற்கு.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? வாக்குச்சாவடிக்கு கிளம்புங்க!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.83 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட SIR பணிகள், டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

மொத்தமாக தமிழ்நாட்டில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிகபட்சமாக சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்களும், கோவையில் 6.50 லட்சம் வாக்காளர்களும், திருப்பூரில் 5.63 லட்சம் வாக்காளர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக குறைந்துள்ளது. இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஜனவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.83 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இந்த சிறப்பு முகாம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தகுதியுடைய வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ அல்லது பெயரை நீக்கவோ படிவம் 7 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதனால் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications