தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்.. வாக்காளர்களே மறந்துடாதீங்க!
சென்னை: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் பிஎல்ஓக்கள் ஈடுபட்டுள்ளனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இரண்டு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று (டிச.14) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர் படிவங்கள்
கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி இந்த பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழகத்தில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள் ஈடுபட்டனர்.
பணிகள் தொடங்கிய முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்தனர். இந்த பணிகளை ஒரே மாதத்தில் முடிக்க வேண்டும் என்பதல் முழு வீச்சில் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. 2002 - 2005 காலகட்டத்தில் நடந்த எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வீடு வீடாக சென்று
38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் இந்த பணிகளில் ஈடுபட்டனர். அதுமட்டும் இன்றி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வந்தனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறைவு செய்ய 2 முறை காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீட்டித்தது.
இன்றே கடைசி நாள்
அதாவது 11 அம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மேலும் 3 நாட்கள் அவகாசம் அளித்தது. அதன்படி, எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் முடிவடைகின்றன. தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்பவும் பெற்று விட்டனர். இந்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர்.
தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications