காரை எடுத்துட்டு.. விறுவிறுவென போன பெண் புள்ளி.. இபிஎஸ்ஸையே பார்த்துவிட்டார்.. அடுத்த நடந்த டிவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் எல்லாம் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வரும் நிலையில்.. முக்கியமான பெண் எம்எல்ஏ ஒருவர் நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்துள்ளார்.

177 வேட்பாளர்களை அறிவித்துவிட்டு... சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக சில இடங்களில் எதிர்ப்புகள் அதிமுகவிற்குள் எழுந்தது. ஆனால் இந்த எதிர்ப்புகள் எல்லாம் தற்போது அடங்கிவிட்டது.

வேட்பாளர் தேர்வுக்கு எதிராக சில சில போராட்டங்கள் நடந்தாலும் அதிமுக தலைமையை கவலையடைய செய்யும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. இதனால் தேர்தல் பணிகள் மீது தற்போது அதிமுக தலைமை கவனம் செலுத்தி வருகிறது.

என்ன?

என்ன?


இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் நேரடியாக முதல்வரை சென்று நேற்று சந்தித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பரமேஸ்வரி முருகன் நேரில் சென்று விமான நிலையத்திலேயே சந்தித்துள்ளார். முதல்வர் வருவதை தெரிந்து கொண்டு.. காரில் முதல் ஆளாக சென்று அவருக்காக பரமேஸ்வரி முருகன் காத்திருந்தார்.

காரணம் என்ன

காரணம் என்ன

கடந்த தேர்தலில் வென்றாலும் பரமேஸ்வரி முருகனுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இவருக்கு பதிலாக மணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பாக பரஞ்சோதி போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த பரமேஸ்வரி நேற்று முதல்வரை நேரடியாகவே சந்தித்து முறையிட்டுள்ளார். அதிமுக தலைமை நிர்வாகிகள் சிலரை இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முறையீடு

முறையீடு

நான் மக்களுக்காக உழைத்தேன்..கட்சிக்கு நேர்மையாக இருந்தேன்.. ஆனால் சிட்டிங் எம்எல்ஏ என்னை புறக்கணித்துவிட்டார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று பரமேஸ்வரி முறையிட்டு இருக்கிறார். அதோடு அங்கேயே நின்று கண்ணீர் விட்டுள்ளார்.

ஆறுதல்

ஆறுதல்

முதல்வர் பழனிசாமி இவரிடம் விமான நிலையத்தில் ஆதரவாக பேசி உள்ளார் . உங்களுக்கான வாய்ப்பு தக்க சமயத்தில் வரும். உங்களுக்கான உழைப்புக்கு பலன் கிடைக்கும் . கவலைப்படாதீர்கள் என்று ஆறுதலாக பேசி உள்ளார். அவரிடம் முதல்வர் கோபம் அடையாமல் பொறுமையாக பேசி இருக்கிறார்.

டிவிஸ்ட்

டிவிஸ்ட்

இதையடுத்து என்ன நினைத்தாரோ.. உடனே மனம் மாறிய பரமேஸ்வரி.. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பேன். உங்கள் முடிவை எதிர்க்க மாட்டேன். எனக்கு நீங்கள் சீட் தந்தாலும், தராவிட்டாலும் முதல்வருக்கு நான் விசுவாசமாக இருப்பேன். தேர்தல் பணிகளை எப்போதும் போல செய்வேன், என்று பரமேஸ்வரி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+