சீக்ரெட் ரூம்.. சிக்கிய ஆவணங்கள்.. சிவசங்கர் பாபா பள்ளியின் ரகசிய அறையில் போலீசார் சோதனை..!
சிவசங்கர் பாபா பள்ளி ரகசிய அறையை திறந்து விசாரணை நடத்துகிறார்கள் போலீசார்
சென்னை: சிவசங்கர் பாபா பள்ளியின் ரகசிய அறையை திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்... இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேளம்பாக்கத்தில் உள்ளது சுஷீல்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி.. இதன் நிறுவனரான சிவசங்கர் பாபா.. இவர் மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.
முக்கியமாக, 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இதில் 2 பேர் சகோதரிகள் ஆவர்...

விசாரணை
அந்த புகார்களின் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்குகள் அடுத்தடுத்து பாய்ந்தன.. இதுவரை சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது... மாணவிகள் அளித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிவசங்கர் பாபா மீது செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரகசிய அறை
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன... இதில், சிவசங்கர் பாபா பள்ளியில் உள்ள ரகசிய அறையிலும் சோதனை நடந்துள்ளது.. இந்த ரகசிய அறையை சிவசங்கர் மட்டுமே பயன்படுத்துவாராம்.. அவர் மட்டுமே இந்த அறையின் கதவை திறக்க முடியுமாம்..

ஆவணங்கள்
அவரது கைரேகை இருந்தால்தான் திறக்க முடியும் என்றிருந்த நிலையில், அவரது கைரேகை பதிவை வைத்து இந்த ரகசிய ரூமைதான் போலீசார் திறந்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை, இந்த ரகசிய அறை தான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. காரணம், பெரும்பாலான மாணவிகள் இந்த ரகசிய ரூமில்தான் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக தங்கள் புகார் மூலம் தெரிவித்திருக்கின்றனர்...

பரபரப்பு
அதன் அடிப்படையில் ரகசிய ரூமில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.. அதுமட்டுமல்ல, இந்த ரூமில் மிக முக்கியமான ஆவணங்களை போலீசார் சோதனையில் கைப்பற்றி கூறப்படுகிறது.. அது தொடர்பான விசாரணையும் நடக்கிறது.. அறை முழுவதும் சோதனை நடத்திய பிறகு, அந்த ஆவணங்கள் குறித்த விசாரணையும் நடந்த பிறகே, இதுகுறித்த முழு உண்மையையும் போலீசார் தெரிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது...












Click it and Unblock the Notifications