ஆகாஷ் பாஸ்கரன் எஸ்கேப்.. ’திடீர் தளபதி’க்கு சிக்கல்! சிவகார்த்திகேயன் அவ்வளவு தான்? சொன்னது யாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை நடவடிக்கையால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகியிருக்கும் நிலையில், திடீர் தளபதிக்கு சிக்கல் முளைத்திருப்பதாக கூறியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன். அதாவது சிவகார்த்திகேயனை தான் திடீர் தளபதி என கூறியுள்ளார் மாறன். சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகியிருப்பதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் 12 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். குறிப்பாக பராசக்தி, இட்லி கடை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகி இருக்கிறார்.

டாஸ்மாக் முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை வைத்து அவர் தயாரிப்பாளராக வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருக்கிறார்.

Sivakarthikeyan blue sattai maran cinema

இந்த நிலையில் தனுஷ் நடித்த இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் இந்த படங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கையால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகியிருக்கும் நிலையில், திடீர் தளபதிக்கு சிக்கல் முளைத்திருப்பதாக கூறியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

சிவகார்த்திகேயன் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," வணங்கான் படத்தில் நடிக்காமல் தப்பினார் சூர்யா. அதில் அருண் விஜய் நடித்தார். படம் ஃப்ளாப். அடுத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையான பராசக்தியில் கமிட் ஆனார் சூர்யா. பிறகு.. இதில் நடித்தால் மத்திய பாஜக அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

தனது பான் இண்டியா ஹீரோ கனவும் புட்டுக்கும் என்பதால், பராசக்தி வேண்டாம் என கழண்டு கொண்டார்., இப்படி ஒரு கான்ட்ரவர்சி கதையில் நடித்தால் தமிழ்நாட்டு மக்களை கவரலாம்.‌ இப்போதைக்கு நமக்கு பான் இண்டியா கனவும் இல்லை. ஆகவே வடக்கே சர்ச்சை வந்தாலும் பரவாயில்லை. அது படத்தின் ப்ரமோசனுக்கு உதவும். படத்தை தயாரிப்பது dawn pictures. அதை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயண்ட். ஆகவே சிக்கல் இல்லை.

அதுபோக நமது படம் ஜனநாயகனோடு மோதி வென்றால்‌‌ மறுநாளே விஜய்யின் இடத்தை பிடித்து விடலாம் என கணக்குகள் போட்டார் திடீர் தளபதி. ஆனால் தற்போதைய‌ ED ரெய்டுகள் இவரது கணக்குகளை கலகலக்க வைத்துள்ளன. கதைதான் கான்ட்ரவர்சி என்று பார்த்தால்.. படத்தை சுற்றி இப்படி ஒரு கான்ட்ரவர்சி வருமென எதிர்பார்த்திருக்க மாட்டார். திடீர் தளபதியின் படத்திற்கு வந்துள்ள திடீர் சிக்கல் எப்போது தீரும் என அவரது திடீர் ரசிகர்கள் ஆதங்கத்துடன் காத்திருக்கிறார்கள்." என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 25வது படம் தான் பராசக்தி, சுதா கொங்கரா இயக்க, "DAWN" பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதில் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+