ஆளுநரின் 5 பொய்கள்; தமிழறிஞர் தந்த விளக்கம்! வள்ளுவர் காவி சர்ச்சை!
சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் பற்றி 5 பொய்களைக் கூறியுள்ளதாகப் பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.
பொதுவாகப் பொங்கல் பண்டிகைக் காலங்களில் ஜல்லிக்கட்டுதான் சர்ச்சைக்குரிய விசயமாக வெடிக்கும். ஆனால், இந்த முறைக் காளையை விட்டுவிட்டார்கள். அந்தச் சர்ச்சை நாற்காலியில் திருவள்ளுவரைத் தூக்கி அமர வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அண்ணாதுரை முதலமைச்சராக இருந்த காலத்திலேயே வள்ளுவரின் உருவம் எப்படி இருக்கவேண்டும் என்று அரசு ஒரு ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ளது. அதையே அரசு அலுவலர்களில் பயன்படுத்த வேண்டும் என்று அரசாணையையும் போட்டுள்ளது.
அதை அடிப்படையாகக் கொண்டு 1960இல் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பிஷ்ணுராம் மேதி, வள்ளுவருக்குத் தபால்தலை வெளியிடுவதற்கான உத்தரவை வெளியிட்டிருந்தார்.
இப்படிப் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் பயன்பாட்டிலுள்ள வள்ளுவர் படத்திற்கு உருத்திராட்சை மாலை அணிவித்துக் காவி உடை உடுத்து ஒரு அரசு விழாவை ஆளுநர் ரவி நடத்தியிருக்கிறார். அதற்கு எதிராகப் பல தமிழறிஞர்கள் உட்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனத்தைப் பதிய வைத்துள்ளனர்.
வள்ளுவர் குறித்து ஆர்.என்.ரவி சர்ச்சையைக் கிளப்புவது முதல்முறை அல்ல. சில ஆண்டுகள் முன்பே இதே காரியத்தை அவர் செய்திருந்தார். ஏன் வள்ளுவரை டார்கெட் செய்கிறார்கள்? அதன் உள்நோக்கம் என்ன? என்று சில தமிழறிஞர்களிடம் கேட்டோம்.

முதலில் சிந்துவெளி நாகரிகம் பற்றியும் தமிழர்களின் தொன்மையான கீழடி நாகரிகம் பற்றியும் தொடர்ந்து எழுதி வரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
"ஒடிசா மாநிலத்தின் பண்பாட்டுச் செயலாளராக இருந்த காலத்தில், ஒரிய பண்பாட்டுக்கு என்று தனி பல்கலைக்கழகம் தொடங்கினோம். அப்போது திருக்குறளுக்கு என்று ஒரு 'இருக்கை' உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதற்கு ஒடிசா மாநில அரசிடம் நிதி கேட்க முடியாது.

அப்போது எனது ஆசிரியர் தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்தார். அவரிடம் கோரிக்கை வைத்தோம். அவர் தமிழக அரசிடமிருந்து 10 லட்சம் ரூபாய் அளித்தார். அதைக் கொண்டு ஒரு இருக்கையை அமைத்தோம்.
அதற்கு முன்னதாகவே 1990இல் திருக்குறளை ஒரிய மொழியில் மொழிபெயர்த்தோம். அதன்பின்னர் திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஏழு இன்பத்துப்பாடல்களை நாட்டுப்புற மெட்டுகளில் 'நாட்டுக்குறள்' என்று ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினோம்.
அதை ஏன் செய்தோம் என்றால், அப்போது திருக்குறளை யாரோ கையகப்படுத்த முயல்கின்றார்கள் என்ற சந்தேகம் வந்தது. திருக்குறளைக் கையகப்படுத்துவது என்பது புதிய முயற்சி இல்லை.

'திருவள்ளுவமாலை' நூலைப் படித்தாலே போதும். இது ஒருவகையில் போற்றுவதாக இருக்கும். அதேசமயத்தில் வள்ளுவரைப் பற்றிய கட்டுக்கதைகளையும் அது கொண்டிருந்தது என்பது உண்மை.
பொதுவாகக் கட்டிடத்தைக் கட்டுவது கஷ்டம். ஆனால் இடிப்பது சுலபம். ஆனால் கட்டுக்கதைகளை இடிப்பது கஷ்டம். கட்டுவது எளிது. இந்தக் கட்டுக்கதைகளை உடைப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை யார் கட்டுகிறார்கள் என்பது.
திருவள்ளுவரை ஒரு பவுத்தர் என்று அயோத்திதாசர் கட்டமைக்கிறார். அவர் திருக்குறள் என்று எழுதமாட்டார். திரிக்குறள் என்றுதான் எழுதுவார். திருக்குறள் எந்தச் சமயத்தையும் முன்வைக்கவில்லை.

அப்படி என்றால் திருவள்ளுவர் சமய நம்பிக்கை அற்றவரா சிலர் கேள்வி எழுப்பலாம். அப்படியில்லை. திருவள்ளுவர் சமய நம்பிக்கை உடையவராக இருந்திருக்கலாம். ஆனால், அவர் எந்தச் சமய நம்பிக்கையின் சார்பாகவும் பேசியவர் இல்லை.
நான் இந்தியா முழுவதும் சென்று பணியாற்றி இருக்கிறேன். இந்தியா முழுவதும் ஜாதியை இரண்டு வகையாகத்தான் பிரித்திருக்கிறார்கள். கலப்பையைத் தொட்டவன் தாழ்ந்தவன். கலப்பையைத் தொடாதவன் உயர்ந்தவன். இந்த முறைதான் இந்தியா எங்கும் உள்ளது.

இதற்கு மாறாகக் கலப்பைத் தொட்ட உழவனை உயர்ந்த ஜாதி என்று சொன்ன முதல் நூல் சங்க இலக்கியம். அடுத்து திருக்குறள். இந்த இரண்டும்தான். வேறு நூல் எதுவுமே உழவனை உயர்ந்தவன் எனச் சொன்னதில்லை.
அடுத்ததாகப் பேராசிரியர் வீ.அரசு என்ன சொல்கிறார் எனக் கேட்டோம். அவர், "நானும் ஆளுநரின் அறிக்கையைப் படித்தேன். அதில் அவர் 5 பொய்களைச் சொல்லி இருக்கிறார். முதலில் காவிக்கும் திருவள்ளுவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்தக் காவி உடையை அணிவிப்பதை நீண்ட நாள்களாகவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் செய்து வருகிறார்கள். அதையே ஆளுநரும் செய்துள்ளார்.
இரண்டாவது, பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று வள்ளுவரைச் சொல்கிறார். பாரதிய சனாதன தர்மம் என்பது அடிப்படையில் நான்கு வர்ணாஸ்ரமங்களைப் பேசுகிறது.
ஆனால், வள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்கிறார். உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களும் சமமானவை. வெவ்வேறு தனித் தொழில்கள் செய்துவந்தாலும் அதனால் வேற்றுமை என்பது இல்லை என்கிறார். அப்படிப்பட்ட வள்ளுவரைச் சனாதன கருத்துகளுடன் ஒப்பிடுகிறார் ஆர்.என்.ரவி. இது மிகப்பெரிய நகைச்சுவை.

மூன்றாவது, வள்ளுவரைத் துறவி என்கிறார். 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்' என்று சாமியார்களை எல்லாம் ஒரு போடு போட்டுள்ளார் வள்ளுவர். நீ தாடி வைக்க வேண்டாம். மொட்டைப் போடவேண்டாம் என்று சொல்கிறார் அவர்.
இதை அவர் எங்கே சொல்கிறார்? துறவறம் பற்றிப் பேசும் பகுதியில் சொல்கிறார். அவரைத்தான் ஆர்.என்.ரவி துறவி என்கிறார். இதுவும் மிகப் பெரிய பொய்" என்கிறார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications