தங்கத்தை அடகு வச்சு.. லோன் எடுக்க போறீங்களா? அசுர வேகத்தில் மார்க்கெட்டில்.. நடக்கும் மாற்றம்!
சென்னை: இந்திய வங்கித் துறையில் ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி மந்தமாக இருந்தாலும், தங்கக் கடன்கள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தங்கத்தின் விலை ஏற்றம் வாடிக்கையாளர் தேவையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சிறு நிதி வங்கிகள் கிளைகளை விரிவுபடுத்தியும், ஊழியர்களை நியமித்தும் தங்கக் கடன் வணிகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
சமீபத்தில்தான் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக தங்க கடன் வழங்குவது தொடர்பான புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகளை வெளியிடப்பட்டது. இதனால் தங்க லோன் வழங்குவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

நாட்டில் உள்ள பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன்களை வழங்குகின்றன. தங்கக் கடனின் கீழ் கிடைக்கும் கடன் தொகை உங்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் அளவைப் பொறுத்தது.
பொதுவாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் தங்கத்தின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக வழங்குகின்றன. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட தரவுகளின்படி, நகைகளுக்கு எதிரான கடன்கள் ஆகஸ்ட் மாதத்தில் 117% அதிகரித்துள்ளன. இது ஒரு வருடத்திற்கு முன்பு 40% ஆக இருந்தது. ஆகஸ்ட் 22 நிலவரப்படி, நிலுவையில் உள்ள தங்கக் கடன்களின் மதிப்பு ரூ. 62.13 லட்சம் கோடியாக உள்ளது.
தங்க நகைகளுக்கு எதிரான கடன்கள்
உலகளாவிய தேவை மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகளால் இந்தியாவில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து சாதனை அளவை எட்டியுள்ளது. சர்வதேச தங்க விலை ஒரு அவுன்ஸுக்கு $4,194 ஆக உயர்ந்தது. புளூம்பெர்க் தரவுகளின்படி, உள்நாட்டு விலை 10 கிராமுக்கு ரூ. 1,30,338 ஆக உயர்ந்தது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹13,288 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹12,180 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹10,060 ஆகவும் உள்ளது.
வாகனக் கடன்கள் மற்றும் தங்க நகைக் கடன்கள் போன்ற பிரிவுகளில் செயல்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFCs) வளர்ச்சி பிரகாசமாக இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது அதிகாரபூர்வ வங்கிகள் இல்லாமல் பைனான்ஸ் துறையில் செயல்படும் நிறுவனங்களில் வாகன மற்றும் தங்க கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாக ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.
வாகன விற்பனையில் ஏற்பட்ட முன்னேற்றமும், தங்கத்தின் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உள்கட்டமைப்பு, வாகனங்கள், வீடுகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்றவற்றுக்கு நிதி வழங்குவதன் மூலம், இவை ஒட்டுமொத்த தேவையை அதிகரிக்கின்றன, வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன, மேலும் பொருளாதார விரிவாக்கத்திற்கு பங்களிக்கின்றன. குறிப்பாகத் தொழில் லோன் மற்றும் சில்லறை வணிகத் துறைகளுக்கான லோன் வழங்குவதில் NBFC-களின் பங்கு அதிகரித்து வருவது. முக்கியமாக தங்க லோன் நிறைய பேர் எடுக்கிறார்கள். கார், பைக் லோன் எடுக்கிறார்கள். இதனால் பைனான்ஸ் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கி உள்ளன என்று ஆர்பிஐ கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications