நொடிக்கு நொடி.. சட்டென சொன்ன மின்வாரியம்.. கரண்ட் பில்லில் அதிரடி.. செல்போன் இருக்கா? உடனே பண்ணுங்க
சென்னை: கரண்ட் பில் கணக்கீட்டில் புது மாறுதல் துவங்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கையில் எடுத்து வருகிறது.. என்ன அது?தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், அதற்கான டெண்டரையும் அரசு கோரியுள்ளது..
மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்

மொபைல் செயலி: இதேபோல, இன்னொரு வசதியையும் மின்துறை கொண்டுவரப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.. அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள்..
சில நாட்களில், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்படுகிறது. ஆனால், கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரம் தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாம்.
அதன்படி, மொபைல் செயலி, ஊழியர்களின் செல்போனில் டவுன்லோடு செய்யப்படும். அதனுடன் ஒரு, "ஆப்டிகல் கேபிள்" வழங்கப்படும். கணக்கெடுக்கும்போது ஒயரை மீட்டரில் செருகி, போனுடன் இணைத்துவிட்டால் போதும்.. இப்போது செயலியை இயக்கியதும் மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும்.
மெசேஜ்: முதல்கட்டமாக, உதவி பொறியாளர்களின் போனில் மொபைல் செயலி சேவையை பதிவேற்றம் செய்து தாழ்வழுத்த பிரிவு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் கணக்கெடுக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கு பிறகே, வீடுகளுக்கு இந்த செயலியை செயல்படுத்த போவதாகவும், இதனால், உடனுக்குடன், அதாவது அடுத்த நொடியே, உங்களுக்கு மெசேஜ் கிடைத்துவிடும்.. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் அறிவிப்பு வரும் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளில் செல்போன் செயலி மூலம் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது.. அதாவது, தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில் மற்றும் வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்த உடனேயே தெரிவிக்கும் வகையில், புது செல்போன் செயலியை, தமிழக மின்வாரியம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆப்டிக்கல் கேபிள்: இப்போது, தொழில் மற்றும் வணிகப் பிரிவில் 61 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. இவற்றில் மாதம்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படுகிறது. ரீடிங் எடுக்க செல்லும் மின்வாரிய ஊழியர்களின் செல்போன்களில் இந்த செயலி பதிவேற்றம் செய்யப்படும். இவை தவிர, ஒவ்வொருவருக்கும் ஆப்டிக்கல் கேபிள் வழங்கப்படும். அந்தக் கேபிளை மின்சார மீட்டர் மற்றும் செல்போனுடன் இணைக்க வேண்டும்.
SMS தகவல்: பிறகு செல்போன் செயலியைஇயக்கியதும் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாடு கட்டண விவரம், கட்டுப்பாட்டு மைய சர்வருக்கு உடனே சென்று விடும். அங்கிருந்து அந்த விவரம் நுகர்வோரின் செல்போன் நம்பருக்கு மெசேஜ் அனுப்பப்படும்.. செல்போன் செயலியில் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் பரிசோதனை அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா 5 பிரிவு அலுவலகங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது.
அந்த அலுவலகங்களின் உதவிப் பொறியாளர்கள், செல்போன் செயலி மூலமாக தாழ்வழுத்தப் பிரிவில் இடம்பெறும் தொழில், வணிக இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுத்தனர். அந்த விவரங்கள் துல்லியமாக பதிவாகின.
உடனடி உத்தரவு: இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றதால், ஒரு மாதத்திற்குள்ளேயே அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் செல்போன் செயலியில் மின்பயன்பாட்டை கணக்கெடுக்க வேண்டும் என்று மண்டலப் பொறியாளர்களுக்கு, மின்வாரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு உத்தரவிட்டிருந்தது.
தற்போது மின் வாரியத்திடம், 2.20 கோடி மின் நுகர்வோர் மொபைல் போன் எண்களை பதிவு செய்துள்ளார்களாம். அதுமட்டுமல்ல, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் இந்த வருட இறுதிக்குள் துவக்கப்பட உள்ள நிலையில், மின் கட்டண விபரம், SMS-ல் அனுப்பப்படும். இதற்காக, தங்களின் பதிவு செய்த செல்போன் நம்பர் சரியாக இருக்கிறதா என்பதை, அப்டேட் செய்து கொள்ளுமாறு நுகர்வோரை, மின்வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, சிலர், புது செல்போன் நம்பரை மாற்றிய நிலையில், புதிய நம்பரை, வாரியத்திடம் இன்னமும் வழங்காமல் இருக்கிறார்களாம். அதனால், மின் நுகர்வோர்கள் தங்களின் செல்போன் நம்பரை சரிபார்த்தும், ஏற்கனவே வழங்கிய நம்பரை மாற்றியவர்கள் புதுப்பித்தும் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
எப்படி புதுப்பிப்பது: செல்போன் நம்பரை புதுப்பிக்க வேண்டுமானால், www.tangedco.org என்ற வெப்சைட்டிற்கு சென்று (Billing Service) பில்லிங் சர்வீஸ் பகுதியில், "மொபைல் எண் அப்டேட்" பகுதிக்கு செல்ல வேண்டும்.. மின் இணைப்பு எண், புதிய மொபைல் எண்ணை பதிவிட்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு என ஏதேனும் ஒரு ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும், அதை பிரிவு அலுவலகங்களில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கூடுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications