நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா
சென்னை: நவீன மருத்துவ வசதிகள் பெருகியுள்ள காலத்திலும், வேரூன்றி இருக்கும் மூடநம்பிக்கை ஒரு இளம் உயிரைப் பறித்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பாம்பு கடியால் உயிரிழந்த விதம், மனிதநேயமற்ற செயலாகவும் அறியாமையின் உச்சமாகவும் பார்க்கப்படுகிறது. என்ன நடந்தது உ.பி.யில்? யாரிந்த சிறுவன்?
அம்ரோகா பகுதியைச் சேர்ந்த அந்த 14 வயது சிறுவனை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. இதையறிந்த பெற்றோர் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் தவறு..

அதற்குப் பதிலாக, உள்ளூரில் இருக்கும் ஒரு மந்திரவாதியிடம் மகனை அழைத்து சென்றுள்ளனர்.. அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய நஞ்சை முறிக்க முயன்றார்.. இதற்காக ஒரு விசித்திரமான மற்றும் கொடூரமான பரிகாரத்தை சொல்லி உள்ளார்.. அதாவது "சிறுவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைத்தால், பாம்பு விஷம் தானாகவே வெளியேறிவிடும்" என்று கூறியுள்ளார். மந்திரவாதி சொன்னதை பெற்றோரும் கண்மூடித்தனமாக நம்பியுள்ளனர்.
பாம்பு கடித்த சிறுவன் - கங்கையில் மிதந்த உடல்
உடனே தன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்தனர்.. மூங்கில்களால் ஒரு தற்காலிக மிதவை போன்ற அமைப்பை உருவாக்கினர். அதில் 14 வயது சிறுவனைப் படுக்க வைத்து, அவன் அசையாதவாறு கயிறுகளால் பிணைத்து கட்டினார்கள்.. அந்த மிதவையை கங்கை நதியில் இறக்கி, சிறுவனின் உடல் நீரில் மூழ்கியிருக்குமாறு செய்தனர். சுமார் 12 மணி நேரம் அந்தச் சிறுவன் கடும் குளிரிலும் தண்ணீரிலும் மூங்கில் மிதவையில் கட்டி வைக்கப்பட்டிருந்தான்.
இந்தக் கொடூரமான நிகழ்வு தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. அந்த வீடியோவில், நதியில் மிதக்கும் மூங்கில் மிதவையில் சிறுவன் அசைவற்றுப் பிணைக்கப்பட்டிருப்பதும், கரையில் ஏராளமான மக்கள் ஏதோ ஒரு அதிசயம் நடக்கும் என்று வேடிக்கை பார்த்துக் காத்திருப்பதும் பதிவாகியுள்ளது.
எந்த அற்புதமும் நடக்கல
12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எந்த அற்புதமும் நிகழவில்லை. முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலும், நீண்ட நேரம் நீரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்பாலும் அந்தச் சிறுவன் பரிதாபமாக அத்தனை பேர் கண் முன்னாடியே உயிரிழந்தான்.
சிறுவனின் உயிரிழப்பு குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
"மக்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டு இதுபோன்ற போலி மந்திரவாதிகள் உயிரோடு விளையாடுகிறார்கள். பாம்பு கடிக்கு மருத்துவ சிகிச்சையே முதன்மையானது என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்" என்று சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர்.
கைது செய்யுங்க
பாம்பு கடித்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால், அந்தச் சிறுவனை மிக எளிதாகக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், மூடநம்பிக்கையால் ஒரு இளம் உயிர் வீணாகப் பலியாகிவிட்டது.. அந்தச் சிறுவனின் பெற்றோர் மற்றும் தவறான வழிகாட்டுதல் வழங்கிய மந்திரவாதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
விளிம்பு நிலை மக்களிடையே கல்வி மட்டுமல்ல, அறிவியல் விழிப்புணர்வையும் சேர்த்து ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது..!!!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications