பாம்பை கண்டால் படையே நடுங்கும்! அப்படிப்பட்ட பாம்பே ஒன்றை பார்த்து அஞ்சுமாமே! அது என்ன?
சென்னை: பாம்புகள் வீட்டுக்குள் வந்து போவது என்பது நல்லதா, இரவில் மட்டும் வந்து செல்வதால் அவற்றை எதையும் செய்யாமல் அப்படியே விட்டுவிடலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் கூறியிருப்பதாவது: பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துபோவது என்பது நல்லதல்ல! அது உங்கள் வீடு சுத்தமாக பராமரிக்கப்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது!

பாம்புகளுக்கு உகந்த இரை எலிகள். எலிகளுக்கான உணவு தானியங்களும் சோற்றுப் பருக்கைகளுமே! அது உங்கள் வீட்டில் அதிகமாகக் கிடைக்கும்போது எலிகள் அதனை சாப்பிட்டு அபரிமிதமாகப் பெருகும்; அப்போது அந்த எலிகளைப் பிடிக்க உங்கள் வீட்டுக்குள் பாம்பு வந்துபோகிறது.
முதலில் வீட்டையும் வீட்டில் பாத்திரங்கள் கழுவுமிடத்தையும் சுத்தமாகப் பராமரியுங்கள். அங்கு தண்ணீர் வெளியேறுமிடத்தில் வலையமைப்பு ஏற்படுத்தி தேங்கியுள்ள உணவுப் பொருள்களை நீக்கி எடுத்து ஒரு சிறிய வாளிக்குள்/ பாலித்தீன் பை போட்டு மூடியினால் இறுகமூடி வையுங்கள். மறுநாள் காலையில் வெளியில் தூரத்தில் கொண்டு சென்று இதனை அப்புறப்படுத்துங்கள்.
வீட்டில் உள்ள பொருள்களை தரையில் ஆங்காங்கே குவித்து வைக்காதீர்கள். தானிய மூட்டைகளாயின் தனி அறைக்குள் அடுக்கி அதனை பூட்டி வையுங்கள். அறைகளில் தண்ணீர் வெளிச் செல்லும் துவாரங்களில் மரக்குச்சி சொருகி இறுக அடையுங்கள்.
வீட்டின் தலைவாசல் கதவுகளை எப்போதும் மூடிவையுங்கள். வெளிப்பார்வை அவசியமானால் கதவுகளின் மேற்புறம் விரல் நுழையும் அளவுள்ள இரும்பு வலையுடன் கூடிய சன்னல் அமைப்பு ஏற்படுத்தலாம். வீட்டு தலைவாசல் நிலையை ஒட்டி வெளிப்புறமாக பூண்டு கரைத்த நீர் தினசரி இரவில் படுக்கப்போகுமுன் தெளியுங்கள். பூண்டின் நெடி பாம்புகளை அங்கிருந்து விலகிச் செல்ல வைக்கும்! அவசரத்துக்கு ஹிட்ஸ்பிரே கரப்பான் பூச்சி மருந்து அடிக்கலாம்!
வீட்டைச் சுற்றிலும் சிறிது மண்ணெண்ணெய் தெளிக்கலாம்! வீட்டின் வெளிப்புறங்களில் இரவு வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அருகில் பூச்செடிகள் இருந்தால் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் உள்ள அதன் இலைகளைக் நீக்கி வெளி இடத்தை எப்போதுமே சுத்தமாக வைத்திருங்கள்.
குளிர்காலங்களில் கதகதப்பான இடம் தேடி கட்டுவிரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்து கதகதப்பான தூங்குபவரின் போர்வைக்குள் வந்து அவரை ஒட்டிப்படுப்பதுண்டு. தூங்குபவர் சற்று புரண்டாலும் கலவரமடைந்து அது அவரைக் கடித்துவிடக்கூடும். இதன் கடி சிறிய தேனீ கொட்டியது போன்ற அளவில் மட்டுமே இருப்பதால் ஆழ்ந்த தூக்கத்திலுள்ள பலர் இதனை உணர்வது இல்லை. எனவே இவ்விதம் கடிபட்டு தூக்கத்திலேயே இறந்தவர்கள் அனேகர் ! இதனை எங்கள் கிராமத்தில் நான் கண்டிருக்கிறேன்.
இரவில் வெளியே செல்லும்போது காலில் பூட்ஸ் அணிந்து செல்வதுடன் டார்ச் லைட் எடுத்துச்சென்று பயன்படுத்துங்கள்.
பாம்பைக் கண்டால் அதனை ஒருபோதும் அடிக்கவோ அல்லது பிடிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம்! பாம்புக்கடிக்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வந்தவர்களில் 50% நபர்கள் அதனை அடிக்க முயற்சி செய்தவர்களென்பது ஒரு புள்ளிவிபரம்!
பாம்பைக்கண்டால் அதனின்று நாம் விலகிச் செல்வதே பாதுகாப்பானது!பாம்புகளும் நம்மைக் கண்டால் விலகிச் சென்றுவிடும். வீட்டை கூடுமானவரை சுத்தமாகப் பராமரிப்பது ஒன்றே பாம்புகள் வீட்டிற்குள் வராமலிருப்பதற்கான தீர்வாகும்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications