புதுசு கண்ணா புதுசு! காலத்திற்கேற்ப அப்டேட்! புதுயுக அரசியலை கையிலெடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு அதிகாரப்பூர்வமான முறையில் சமூக வலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பேஸ்புக், X தளம், இன்ஸ்டாகிராம், மற்றும் வாட்ஸ் அப் சேனல் மூலம் தனது தனிப்பட்ட கருத்துக்களையும், கட்சியின் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவேன் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (21.02.2024) முதல் அதிகாரப்பூர்வமான முகநூல் பேஸ்புக் (Facebook), X தளம், இன்ஸ்டாகிராம், (Instagram) மற்றும் வாட்ஸ் அப் (WhatsApp Channels) போன்ற சமூகவலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.''
மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தின் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*Premallatha Vijayakant (General Secretary - Desiya Murpokku Dravida Kazhagam) Official Social Media Links*
*Twitter X https://x.com/PremallathaDmdk?t=ajELDtyUff-iRQ3jgZd4mg&s=09
*Instagram https://www.instagram.com/_premallathadmdk?igsh=NGdlOGJlYzh5a210
*FaceBook https://www.facebook.com/profile.php?id=61556479832259&mibextid=ZbWKwL
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தகவல் தொழில்நுட்ப அணி என்பது மிகவும் அவசியமான சார்பு அணியாக பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எதிரணியினருக்கு பதிலடிகள் கொடுக்கவும், கட்சியை புரோமோஷன் செய்யவும் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு அவசியம் என்பதால் அதன் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
இதனிடையே தேமுதிகவிற்கு புத்தெழுச்சி கொடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்தி புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. விஜயகாந்தின் திடீர் மறைவால் அந்தப் பணிகளை தள்ளி வைத்த பிரேமலதா, இப்போது மீண்டும் அதை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
இன்றைய அரசியல் சூழலில் விளம்பரங்கள், புரோமோஷன்கள் இல்லையென்றால் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகி நிற்க வேண்டியிருக்கும் என்பதால், சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் காலத்திற்கேற்ப புதுயுக அரசியலை கையில் எடுக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
இதனிடையே பிரேமலதாவின் சமூக வலைதள கணக்குகளை அவரது மகன் விஜய பிரபாகரன் தான் நிர்வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Premallatha என நியூமராலஜி படி தனது பெயரில் கூடுதலாக ஒரு 'L' ஐ சேர்த்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications