பின்னால் இருந்து சதி பண்றாங்க.. ஜாக்கிரதையா இருங்க.. எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டிற்கு எதிராக பின்னால் இருந்து சிலர் சதி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ரம்ஜான் மாதத்தில் எப்போதும் திமுக சார்பாக நோன்பு திறக்கும் விழா ஒருநாள் நடத்தப்படும். அந்த வகையில் நேற்று திமுக சிறுபான்மையினர் நல பிரிவு சார்பாக ரம்ஜான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை திருவான்மியூரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதேபோல் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின்
இந்த நோன்பு திறக்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரம்ஜான், மிலாது நபி விழாக்கள் இஸ்லாம் மதத்தில் ஒரு அங்கம். இந்த ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு மிக மிக புனிதமான மாதம். அவர்கள் தங்களின் பசி, தாகம் ஆசைகளை அடக்கி நோன்பு இருக்கிறார்கள். திருவாரூரில் இருந்த போது குடிஅரசு இதழையும், தாருல் இஸ்லாம் இதழையும் படிப்பதை வழக்கமாக வைத்து இருந்தேன் என்று தலைவர் கருணாநிதி என்னிடம் பல முறை குறிப்பிட்டு இருக்கிறார்.

இஸ்லாமியர்கள்
முன்னாள் முதல்வர்கள் அண்ணாவையும், கருணாநிதியையும் இணைத்தது இஸ்லாமியர்களின் மிலாது நபி நிகழ்ச்சி என்பதை மறக்க வேண்டாம். அந்த விழாவின் போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில்தான் முதல்முறையாக கருணாநிதியை பெரியார் சந்தித்தார். தமிழினத்தை சாதி, மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அதை நாம் அனுமதிக்க கூடாது. வேறுபாடுகளை கடந்த நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நோன்பு ஸ்டாலின்
நமக்கு பின்னால் இருந்து சிலர் சதி செய்கிறார்கள். நம்மை பிளவு படுத்தினால் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நமது வளர்ச்சியை தடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்துவிட கூடாது. ஒற்றுமையாக இருந்து முன்னேறுவதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.

சதி
தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த சதிகள் வெற்றிபெறாத வண்ணம் நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தந்தை பெரியார் என் உள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதே போன்ற தாக்கத்தை பா தாவூத் ஷாவும் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கிறார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார்.

அப்பாவின் வாழ்க்கை
என் வாழ்க்கையோடும், என் அப்பாவின் வாழ்க்கையோடு எப்போது இஸ்லாமியர்கள் இணக்கமாக இருந்துள்ளனர். முரசொலியை முதலில் அச்சில் வெளியிட்டது கருணை ஜமால் என்பவர்தான். திருவாரூரைச் சேர்ந்த அசன் அப்துல்காதரை எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறது. அவர்தான் என் அப்பாவிற்கு சின்ன வயதில் இருந்து உற்ற தோழனாக இருந்து வந்துள்ளார், என்று முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications