சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது! கவனம் மக்களே
சென்னை: சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இன்று (ஜுன் 6) ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் மாநிலம் முழுவதும் மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (ஜுன் 6 தேதி) சென்னையில் மின்வாரியம் பராமரிப்பு பணியை மேற்கொள்கிறது. இதனால் சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 06.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை 33/11 கி.வோ. ஈஞ்சம்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள 11 கி.வோ பனையூர் மின்னூட்டி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக பனையூரில் சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி குடுமியாண்டி தோப்பு பள்ளி தெரு, காயிதே மில்லத் தெரு, வேலு நாயக்கர் தெரு, அதித்யாராம் நகர், என்ஆர்ஐ லேஅவுட் (விஜிபி சவுத் அவென்யூ), ஜெ நகர், (செம்மொழி தெரு) பனையூர் குப்பம் ஏரியா, சீ ஷோர் டவுன் ஒன்று முதல் பதிமூன்றாவது அவென்யூ வரை, சமுத்ரா தெரு, (ராஜாஜி தெரு) மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
பராமரிப்பு பணியால் இந்த இடங்களில் இன்று காலை நிறுத்தப்படும் மின்சாரம் மீண்டும் மதியம் 02.00 மணிக்குள் மறு விநியோகம் செய்யப்படும்'' என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி செய்ய வேண்டிய பணிகளை காலை 9 மணிக்குள் செய்து முடித்து கொள்வது நல்லது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications