தமிழகத்தின் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தின் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

ஆனால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும் அனல் காற்றும் வீசி வரும் சென்னையில் மழை ஓரவஞ்சனை செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.மதுரை, தல்லாகுளம் 50 மிமீ, தர்மபுரி, பாப்பிரெட்டி பட்டி, திருமங்கலம் 40 மிமீ, நெய்வேலி, ஒசூர் 30 மிமீ, கரூர், பாலக்கோடு, 20 மிமீ, தளி, செஞ்சி, தாளவாடி, சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர், போளூர் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications