நீட் விலக்கு மசோதாவை.. குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு? வெளியான பரபர தகவல்
சென்னை: நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டில் நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்பை மேற்கொள் காட்டி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கத் தொடர்ந்து மறுத்தே வருகிறது.

நீட் மசோதா
கடந்த ஆண்டு செப். மாதம் முதல்முறையாக நீட் விலக்கு மசோதாவைத் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த பிப். மாதம் இந்த தீர்மானத்தைத் திருப்பி அனுப்பினார்.

ஒப்புதல் இல்லை
இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டப்பட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வகை செய்யும் சட்ட மசோதா மீண்டும் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இருப்பினும், இந்த நீட் தீர்மானத்திலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் விலக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததது.

தேநீர் விருந்து
நீட் விலக்கு தீர்மானத்தில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திமுக எம்பிகள், இல்லையென்றால் ஆளுநரை வாபஸ் பெற வேண்டும் என்றும் திமுக எம்பிகள் வலியுறுத்தினர். இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டை ஓட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் தேநீர் விருந்தை அறிவித்து இருந்த நிலையில், அதைப் புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. மேலும், திமுக தோழமை கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.

குடியரசுத் தலைவர்
இந்தச் சூழலில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 13ஆம் தேதி 2ஆவது முறையாக ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த சட்ட மசோதாவை விரைவில் அவர் குடியரசுத் தலைவரிடம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் 11 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications