கொல்கத்தா அணிக்கு பெரிய அடி.. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்? அடுத்த கேப்டன் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கேகேஆர் அணியின் கேப்டனாக ஷர்துல் தாகூர் நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் காட்டுத் தீ போல் தீவிரமாகி வருகிறது. மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம்
இந்த நிலையில் கொல்கத்தா அணி மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்துள்ளது. அந்த அணியின் கேப்டனும் முக்கிய வீரருமான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்யவில்லை. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இருந்தும் விலகியுள்ளார்.

5 மாதங்கள் ஓய்வு இருக்க அறிவுறுத்தல்
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்டுள்ள காயம் முழுமையாக குணமடைய 5 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றும், மருத்துவர்கள் தொடர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொல்கத்தா அணி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பின்னடைவை சந்தித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கை மற்றொரு வீரரை வைத்து நிரப்பினாலும், அவரின் கேப்டன்சியை எப்படி நிரப்புவது என்று தெரியாமல் உள்ளது.

பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்
அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் வெற்றிகரமான பயிற்சியாளரான உள்ள சந்திரகாந்த் பண்டிட் கேகேஆர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் குறித்து சந்திரகாந்த் பண்டிட் கூறுகையில், ஸ்ரேயாஸ் ஐயர் காயம் குறித்து இறுதி அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் எங்களுக்கு சமமான வீரரகாள் தான் நெரு தெரிவித்தார்.

கேப்டனாக ஷர்துல் தாகூர்?
இதனிடையே கேகேஆர் அணிக்கு ஷர்துல் தாகூர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் - ஷர்துல் தாகூர் இருவரும் மும்பை அணிக்காக ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். அதேபோல் சந்திரகாந்த் பண்டிட் அறிவுறுத்தலின் பேரிலேயே கொல்கத்தா அணி ஷர்துல் தாகூரை டெல்லி அணியிடம் இருந்து ட்ரான்ஸ்ஃபர் முறையில் ஒப்பந்தம் செய்தது.

யார் அடுத்த கேப்டன்?
இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினால், கேகேஆர் அணியின் அடுத்த கேப்டனாக ஷர்துல் தாகூர், சுனில் நரைன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதால், கேகேஆர் அணியின் பிராண்டாகவும் முன்வைக்கப்பட்டு வந்தார். தற்போது அவர் விலகியதாக வரும் தகவல்கள், கேகேஆர் நிர்வாகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications