பள்ளிக்கரணை பகுதியில் பிரம்மாண்ட இன்ப அதிர்ச்சி..நெகிழ்ந்து போய் தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்த செயல்
சென்னை: தென் சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , அவருக்கு ஜேசிபி மூலம் பூக்கள் தூவி அட்டகாசமான வரவேற்பு அளித்துள்ளார் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என ஆறு தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் கடந்த முறை களம் கண்ட தமிழச்சி தங்கப்பாண்டியன் களம் இறங்குகிறார்.. அதிமுக சார்பில் கடந்த முறை தோல்வியை தழுவிய டாக்டர் ஜெயவர்தன் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கவர்னராக இருந்து ராஜினாமா செய்த தமிழிசை சௌந்திரராஜன் களம் இறங்கி உள்ளார். நாம் தமிழர்கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி போட்டியிடுகிறார்.

தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை படித்தவர்கள் அதிகம் இருக்கும் தொகுதியாகும். இங்கு திமுக சார்பி மீண்டும் களம் இறங்கி உள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் 2014ல் வெற்றி பெற்றது போல் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் கடந்த மார்ச் 25ம் தேதி தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். சைதாப்பேட்டை - நெருப்புமேடு பகுதியிலிருந்து முதல் நாளில் பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
மறுநாள் , அதாவது மார்ச் 26ம் தேதி மயிலாப்பூர் கிழக்கு பகுதியில் தொடங்கி மாதவநகர் ஆர்.கே.நகர், வள்ளீஸ்வரன் தோட்டம், கட்டபொம்மன் தெரு, காமராஜர் சாலை, சீனிவாச அவின்யூ, ராஜா முத்தையாபுரம், குட்டிகிராமணி தெரு, கபாலி வனபோஜன தோட்டம், நாராயணசாமி தோட்டம் இரண்டாவது சாலை, ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் எஸ்.கே.பி. புரம், அன்னை தெராசா நகர், அன்னை சத்தியா நகர், கிரீன்வேஸ் ரோடு, ஆர்.கே.மடம் சாலை, ராஜா தெரு, ராஜா கிராமணி தோட்டம், காவலர் குடியிருப்பு, சீனிவாசபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
இன்று காலை மயிலாப்பூர் கிழக்கு பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து சோழிங்கநல்லூர் - பள்ளிக்கரணை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , அவருக்கு ஜேசிபி மூலம் பூக்கள் தூவி அட்டகாசமான வரவேற்பு அளித்துள்ளார் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்.
மேலும் கிரேன் மூலம் ராட்சத ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது. பிரம்மாண்ட முறையில் நடந்த இந்த வரவேற்பை பார்த்த தமிழச்சி தங்கப்பாண்டியன் கையெடுத்து கும்பிட்டு நெகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications