தமிழ்நாட்டில் அடித்து துவைத்த மழை.. இந்த சீசனில் எவ்வளவு பெய்துள்ளது தெரியுமா? சுவாரசிய பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை இயல்பைவிட 95 சதவிகிதம் அதிகம் பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் மேட்டூர் அணையிலிருந்து சுமார் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டதற்கு இந்த பெரும் மழைப்பொழிவு காரணமாகும்.

பெருமழை
கடைசியாக கடந்த 2018ல் இவ்வாறு மழை பொழிந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இயல்பான அளவு மட்டுமே மழை பதிவாகி இருந்தது. இதனையடுத்து தற்போது இந்த ஆண்டில் இயல்பைவிட 95 சதவிகிதம் அதிகமாக பருவ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் ஜூலை மாதத்தில் தினசரி மழை பொழிவை எதிர்கொண்டது. ஆனால் மலைப் பகுதிகளையொட்டியுள்ள இடங்களில் பெய்த மழையை காட்டிலும் கடலோர மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு குறைவுதான்.

சராசரி அளவு
வழக்கமாக அக்டோபரில் தொடங்கும் இந்த பருவ மழையை நம்பிதான் மாநிலம் முழுவதும் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இவ்வாறு இயல்பைவிட விரைவாக இந்த பருவ மழை தொடங்குவது என்பது நல்ல விஷயம்தான் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு இவ்வாறு மாறுபடுவது இயல்பானதுதான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு 142.8 மி.மீ அளவுதான் மழையை பெரும்.

இயல்பை விட அதிகம்
ஆனால், மழை தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் 12ம் தேதி வரை சுமார் 279 மி.மீ. அதாவது 95% அளவுக்கு மழை அதிகமாக பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில், 33 மாவட்டங்கள் இயல்பை விட அதிக மழைப்பொழிவை பெற்றுள்ளன. அதவது ஆகஸ்ட் 4-10 தேதியில் மட்டும் 16.1 மிமீ அளவில் மழை பெய்வது இயல்பு. ஆனால் இந்த நாட்களில் 30.4 மிமீ பெய்திருக்கிறது.

காரணம்
அதேபோல ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை 428.7 மிமீ மழையை பெற்றிருக்க வேண்டிய தெலங்கானா மாநிலம் சுமார் 791.9 மிமீ மழையை பதிவு செய்துள்ளது. இது அம்மாநிலத்தின் சராசரியை விட சுமார் 85 சதவிகிதம் அதிகமாகும். மொத்தமாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியா முழுவதும் 35% அளவுக்கு அதிகமான மழைப்பொழிவை பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு பஞ்சாபின் கங்காநகரில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் வரை வங்காள விரிகுடாவை நோக்கி செல்லும் ஒரு நீளமான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான் காரணம் என சொல்லப்படுகிறது.

விளக்கம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதன் இயல்பான நிலைக்கு தெற்காக இருக்கும்போது, மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும். தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இயல்பை விட சற்று தெற்கே நகர்ந்து இருக்கிறது இதனால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில் உருவான அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், மேற்கு நோக்கி நகர்ந்ததால், தீவிரமடைந்து கனமழையை உருவாக்கி உள்ளதாகவும் தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறை
தென்னிந்தியாவில் நிலைமை இவ்வாறு இருக்க, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், கங்கை நதி, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய நிலப்பரப்புகள் மழை பற்றாக்குறையால் தவிக்கின்றன. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், ஒட்டுமொத்தமாக, 16% மழை பற்றாக்குறையை எதிர்நோக்கி உள்ளன. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் 36%, கிழக்கு உத்தரபிரதேசம் 46% மற்றும் மேற்கு உ.பி.யில் 39% என மழை பற்றாக்குறை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications