காது கூசுது.. இவ்ளோ கேவலமாக பேசுவதா? நயன்தாரா குறித்த சிவி சண்முகம் பேச்சு! நடிகர் சங்கம் டென்ஷன்
சென்னை: நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை கூறிய சிவி சண்முகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நாசர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் என்டிஏ கூட்டணி சார்பாக சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈழுபட்டனர்.

விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சிவி சண்முகம், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த "உங்க கனவை சொல்லுங்க" என்ற திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அப்துல் கலாம் அனைவரையும் கனவு காணுங்கள் என்று கூறினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேல் சென்று "உங்க கனவை சொல்லுங்க" என்று சொல்கிறார்
ஆமா.. எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேற்றுவாரா?.. நயன்தாராவை கல்யாணம் பண்ணி வை என்று கேட்பான்.. செய்து வைப்பாரா? என்று பேசினார். சிவி சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையாகியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். சிவி சண்முகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சங்கம் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சி.வி.சண்முகம் எம்.பி.க்கு, சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும், கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.
தேர்தல் களத்தில் கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டி இருக்கிறது.
ஆனால், தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.
மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது. எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்.
இது பெண்களின் யுகம். அவர்கள் இல்லாத துறையே இல்லை. வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக, பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அரசியலில் கோலோச்சிய இந்திராகாந்தி, உங்கள் தலைவி ஜெயலலிதாவை விடவா உதாரணம் இருக்க முடியும்.
அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?, தலைவவர்கள் கற்றுக் கொடுத்தார்களா?, அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா?, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம். தங்களிடம் இருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்... இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பில் கண்டனங்கள் வலுத்த நிலையில், சிவி சண்முகம் நயன்தாரா தொடர்பான பேச்சிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். முற்றிலும் தவறுதலாகவே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான உள்நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்று கூறினார்.
-
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications