இனி தெற்கும் வாழும்.. அந்த புள்ளி ஸ்டாலினை பார்த்தது இதுக்குத்தானா? தமிழ்நாடு அரசின் அதிரடி! சூப்பர்
சென்னை: சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது அலுவலகத்தில் முக்கியமான தொழிலதிபர் ஒருவரை சந்தித்தார். இவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடந்தது என்று கோட்டை வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. இதில் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சென்னை
தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இப்போதும் கூட டாட்டா நிறுவனத்தை இந்த ஆலையை வாங்கும்படி தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

மீட்டிங்
இந்த நிலையில்தான் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் திரு. என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். முதலில் மூத்த அமைச்சர்கள் எல்லோரும் இவரை சந்திக்கும்படி முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு. அதன்படியே மூத்த அமைச்சர்கள் இவரை சந்தித்தனர். அதன்பின் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திரசேகரன் சந்திப்பு நடத்தினார். இவர்கள் தமிழில் பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இருந்தனர். இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆலோசனை
அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாடாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதோடு நிற்காமல் தென் மாவட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாகவும் இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய டாடா நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இந்த முதலீடுகள் செய்யப்பட உள்ளன. கடந்த சில வருடங்களாக தென் மாவட்டங்களில் தமிழ்நாட்டில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலை
இந்த நிலையில்தான் தற்போது டாடா நிறுவனமும் தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications