மக்களே நோட் பண்ணுங்க. ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு.. சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.. முழுவிவரம்
அதாவது, சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இடையே வழக்கமாக இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் - ஆவடி இடையே வழக்கமாக இரவு 11.55க்கு இயக்கப்படும் ரயில் மேற்குறிப்பிட்ட தேதியில் ரத்து செய்யப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் - சென்ட்ரலுக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி மற்றும் சென்ட்ரல் பகுதியாக ரத்து செய்யப்படும்.
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதன்படி ஆவடி-பட்டாபிராம்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை என பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 6 வழிகளில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-ஜோலார்பேட்டை, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்-நெல்லூர், கடற்கரை-தாம்பரம், கடற்கரை-விழுப்புரம் ஆகிய தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக சில நேரங்களில் இந்த வழித்தடங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்படும். அதேபோல தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சில வழித்தடங்களில் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதாவது, சென்டரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இடையே வழக்கமாக இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் - ஆவடி இடையே வழக்கமாக இரவு 11.55க்கு இயக்கப்படும் ரயில் மேற்குறிப்பிட்ட தேதியில் ரத்து செய்யப்படும். பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் - சென்ட்ரலுக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி மற்றும் சென்டிரல் பகுதியாக ரத்து செய்யப்படும்.

வியாசர்பாடி
சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது சென்ட்ரல் மற்றும் வியாசர்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சூல்லூர்பேட்டை - சென்ட்ரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில் 'பேசின் பிரிட்ஜ் மற்றும் சென்ட்ரல்' இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பேசின் பிரிட்ஜ்
சென்ட்ரல்- சூல்லூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சூல்லூர்பேட்டை - சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் கொருக்குபேட்டை மற்றும் சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளுர் இடையே இரவு 11.15 மணி இய்யக்கப்டும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 11.45 மணி இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்.

பயணிகள்
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புறநகர் சேவையை சென்னை புறநகர் ரயில் சேவைதான் கொண்டிருக்கிறது. அதேபோல மும்பை கொல்கத்தாவுக்கு அடுத்து மிகவும் பிஸியான ஒரு புறநகர் ரயில் சேவை எது என்னவென்றால் அது சென்னை புறநகர் ரயில் சேவைதான். கடந்த 2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் லோக்கல் ரயிலை சுமார் 25 லட்சம் பேர் தினமும் பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு 4.7 கோடி பேர் இந்த லோக்கல் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

புதிய திட்டம்
கடந்த 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ரயில் சேவை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது இந்த அளவுக்கு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது உள்ள இந்த சேவையானது சைதாப்பேட்டை - ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் - செங்கல்பட்டு, கேளம்பாக்கம் - வண்டலூர், பரங்கிமலை - போரூர் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட திட்டமிட்டிருக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications