தென் மாவட்ட பயணிகளுக்கு ஸ்வீட் நியூஸ்.. வேற லெவல் ஸ்பீடு.. 130 கிமீ வேகத்தில் பாயப் போகும் ரயில்கள்
சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீட்டர் வரை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பயண நேரம் பல நிமிடங்கள் மிச்சமாகும்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தொழில் நிமித்தமாகவும் பணிக்காகவும் சொந்த ஊர்களை விட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்வதுண்டு.

குடும்பத்துடன் செல்லும் பயணிகள் முதலில் ரயிலில் செல்லத்தான் விரும்புவார்கள். இதனால், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் எல்லாம் சாதாரண நாட்கள் கூட டிக்கெட்டுகள் கிடைக்காது. பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் டிக்கெட் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது.
அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே தேவையில்லை. முன்பதிவு இல்லாத பொது பெட்டியில் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும். தற்போது சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலமாக செல்ல சராசரியாக 10.45 மணி நேரம் வரை ஆகிறது. இந்த நிலையில், பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக ரயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை மேலும் குறைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:- ரயில் வழித்தடங்களின் தரம் உயர்த்துவது, சிக்னல் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களின் வேகம் தற்போது மணிக்கு 110 கி.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.
இந்த அதிகரிக்கப்படும் வேகத்தால் பயண நேரம் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை குறையும். இதனால் பயணிகள் நேரம் கணிசமாக மிச்சப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் புதிய காலஅட்டவணையில் இடம் பெறும்" என்று கூறப்பட்டது. பல வழித்தடங்களிலும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் விதமாக ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை தடத்தில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் விரைவில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகரிகள் கூறியிருப்பது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டி தரும் ரயில்வே வழித்தடங்களிள் தென் மாவட்ட ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்த படி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் செல்வதை காண முடியும். ரயிலின் வேகம் அறிவிக்கப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வந்தே பாரத் ரயிலையும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications