மகளை பார்த்ததும்.. முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.. சுயநினைவை பெற்ற எஸ்பிபி.. எப்படி இருக்கிறார்?
சென்னை: பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனா காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று அவரின் மகன் எஸ்பி சரண் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரின் உடல்நிலை தொடக்கத்தில் நன்றாகவே இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின் இவரின் உடல்நிலை வேகமாக நலிவு அடைய தொடங்கியது. உடல் ஆரோக்கியம் ஏற்ற இறக்கமாக இருந்தது.

உடல் எப்படி
சில நாட்கள் அவரால் எளிமையாக மூச்சு விட முடிந்தது. சில நாட்கள் சரியாக மூச்சு விட முடியவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் வெளியாகி வந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் வகையில் எஸ்.பி.பி மகன் எஸ்பி சரண் தினமும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.

எஸ்.பி.பி எப்படி இருக்கிறார்
இந்த நிலையில் தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரின் மகன் சரண் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி எஸ்.பி.பி தற்போது 95%க்கும் மேல் சுயநினைவை பெற்றுவிட்டார். நன்றாக மூச்சு விடுகிறார். லேசான சிரமம் இருந்தாலும் உடல்நிலை முன்னேறி வருகிறது. தன்னை பார்க்க வரும் நபர்களை அடையாளம் காண்கிறார்.

உடல்நிலை
அவரின் தசைகள் இறுக்கம் ஆகியுள்ளது. இதற்காக தற்போது பிசியோ அளிக்கப்பட்டு வருகிறது. பிஸியோவிற்கு உடல் ஒத்துழைப்பு அளிக்கிறது. பிசியோ காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவரின் தசைகள் மாற்றம் அடைந்து வருகிறது. அவர் எழுந்து நடக்க இந்த பிசியோ உதவும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முன்னேற்றம்
அவரின் உடல் நிலை வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் அவர் குணமடைய வாய்ப்புகள் உள்ளது. முன்பு மிகவும் சிரமப்பட்டார். ஆனால் தற்போது அவரின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருகிறது, கைகள் இயக்கம் சரியாகி உள்ளது என்று கூறப்படுகிறது. முன்னதாக எஸ்.பி.பியை பார்க்க சரண் மற்றும் அவரின் சகோதரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

மகளை பார்த்தது
தனது மகளை பார்த்ததும் எஸ்.பி.பி சந்தோசம் அடைந்து உள்ளார். அவரின் முகத்தில் பெரிய அளவில் மகிழ்ச்சியை காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்பாக்களுக்கு எப்போதும் மகள் என்றால் தனி பாசம் இருக்கும். எஸ்.பி.பியும் அதே போல் மகளை பார்த்ததும் சந்தோசத்தை முகத்தில் காட்டி இருக்கிறார். இதனால் இவர் மீண்டும் உடல்நலம் பெற்று திரும்புவார் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications