தொடர்ந்து ஐசியூவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று, எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள, எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
3 நாட்கள் முன்பு, பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது ரசிகர்களை பெரும் கவலைக்குள்ளாக்கியது.
பாடல் ராஜாவே.. எங்கே நீ எங்கே.. எஸ்பி பாலசுப்ரமணியத்துக்காக பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!

வாழ்த்து மழை
இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலன் பெற இறைவனை வேண்டுவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், அடுத்த நாளே, அவரது உடல்நிலை முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு
இந்த நிலையில், இன்று எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எம்ஜிஎம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐசியூவில் தொடர்ந்து உயிர்காக்கும் உபகரணங்களின் சிகிச்சை உதவியுடன் உள்ளார். மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை பயணம்
இதனிடையே, எஸ்.பி.பி தங்க வைக்கப்பட்டுள்ள அறையில், அவர் பாடிய பிரபல பாடல்கள் ஒலிக்கவிடப்படுகின்றன. "முதல்முறை பாடல் பாடியபோது தெரியாது.. இசை என்னை 50 வருடம் பயணிக்க வைக்க போகுதுன்னு.." என்று கூறியவர் எஸ்பிபி. இசை அவருக்கு ஒரு அருமருந்து. எனவேதான், பாடல்கள் இசைக்கவிடப்படுகின்றன.

பாடல்கள்
எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்க நிலையிலிருந்து மீண்ட எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டு வார்டில் சிகிச்சை பெறுகிறார். இந்த நிலையில்தான், இசை சிகிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். தனது, இனிய குரலால் பலரை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தான் பாடிய பாடலை கேட்டு மீண்டு வருவார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications