எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம்.. குடும்பத்தினர் தகவல்
சென்னை: பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமான தாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

பிரார்த்தனை
இதையடுத்து கலக்கத்திற்கு உள்ளாகினர் அவரது ரசிகர்கள். பல்வேறு நடிகர் நடிகைகள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாலசுப்பிரமணியம் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மனைவி, சாவித்திரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளையராஜா, ரஹ்மான்
இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

அறிக்கை
இந்த நிலையில்தான் எஸ்பி பாலசுப்ரமணியம் மகன், சரண் மற்றும் பாலசுப்பிரமணியம் சகோதரி வசந்தா ஆகியோர்அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சரண் கூறுகையில், எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பான கரங்களில் அவர் பாதுகாப்பாக இருக்கிறார். எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். விரைவிலேயே அவர் நலம் பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார் சரண்.

மனோதிடம்
மேலும் சிகிச்சையின் போது பாலசுப்பிரமணியம் தனது கட்டை விரலை உயர்த்தி உற்சாகம் தெரிவிப்பது போன்ற ஒரு படத்தை வெளியிடப் பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியம் சகோதரி வசந்தா கூறுகையில், எனது சகோதரரின் மனோதிடம் மிகவும் பலமானது. அனைத்து நலம் விரும்பிகளின் வழிபாடு மற்றும் வேண்டுதல், கடவுளின் ஆசீர்வாதம் ஆகியவற்றின் காரணமாக எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைவார் என்று தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications