எக்மோ சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.. ஏன் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது? எப்படி செயல்படும்?
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு, எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Recommended Video
இதற்கு முன்பு எக்மோ என்ற வார்த்தையை, தமிழகம் அடிக்கடி கேள்விப்பட்டது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுதான்.
வென்டிலேட்டர் சிகிச்சையைவிடவும் மேம்பட்டதா எக்மோ சிகிச்சை? எப்படி, எதற்காக இந்த சிகிச்சை கொடுக்கப்படுகிறது. இதோ ஒரு விளக்கம்:

செயற்கை நுரையீரல்
Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்ற உபகரணம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதைத்தான் எக்மோ என்று சுறுக்கமாக சொல்கிறோம். இது செயற்கை நுரையீரல் போன்ற ஒரு உபகரணமாகும். நுரையீரல் செயல்படாத நேரத்தில் இந்த கருவி பொருத்தப்படுவது வழக்கம். 1970களில் இருந்து இந்த கருவி மருத்துவ பயன்பாட்டில் உள்ளது. இந்த கருவி, இதயம் மற்றும் மூச்சு சீராக இருப்பதை உறுதி செய்யும்.

சிறு கருவி
ஆக்சிஜனை உடலுக்கு சேர்க்கும் பணியை நுரையீரல் செய்ய வேண்டும். ஆனால் அது செயல்படாமல் போகும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். அப்போதுதான், இந்த கருவி மிகுந்த அவசியப்படுகிறது. இதற்காக, catheter என்ற சிறு கருவி (பேஸ்மேக்கரை போல), இதயத்தின் அருகேயுள்ள மைய ரத்த நாளத்தில் பொருத்தப்படும். செயற்கை பம்ப் ஒன்று, இந்த கருவிக்குள், ரத்தத்தை செலுத்தும்.

ஆபத்தான கட்டங்களில் உதவும்
அப்படி ரத்தம் செலுத்தப்படும் முன்பாக, ஆக்சிஜனை கலக்கும் ஒரு கருவி வழியாக அந்த ரத்தம் பாயும். அப்போது உரிய ஆக்சிஜன் ஏற்றப்ட்டு, உடலுக்குள் ரத்தம் செய்வது உறுதி செய்யப்படும். சுவாச கோளாறால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்போது, இது பயன்படுத்தப்படுகிறது.

தீர்வு
பம்ப் போன்ற கருவி மூலம், ரத்தத்தை வெளியே எடுத்து, அதில் ஆக்சிஜனை கலந்து மீண்டும், மத்திய நரம்பு மூலமாக அதை செலுத்தும் நடைமுறைக்கு பெயர் வெனோவெனஸ் எக்மோ என அழைக்கப்படுகிறது. இது காற்று மாற்று செயல்பாடு மட்டுமே. நரம்பு வழியாக வெளியே எடுக்கப்படும் ரத்தம், மீண்டும், arteryவுக்குள் செலுத்தப்படும் நடைமுறைக்கு பெயர் வெனோரடேரியல் எக்மோ. இவ்விரு செயல்பாடுகள் மூலம், சுவாசப்பிரச்சினை, ரத்தம் உந்தி தள்ளப்படும் பிரச்சினை ஆகிய இரண்டும் தீர்க்கப்படும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications