Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிஸ்டர் வேலுமணி".. கொங்குவில் "கை" வைத்த ஸ்டாலின்.. காலையிலேயே அதிரடி.. அதிர்ச்சியில் அதிமுக..!

எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.. இதையடுத்து கொங்கு மண்டலத்தில் திமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Recommended Video

    கோவையில் முதல்வர் ஸ்டாலின் சூளுரைந்த அந்த நாள்.. என்ன சொன்னார் எஸ்பி வேலுமணி குறித்து...?

    இந்த முறை பிரச்சாரத்தின்போது, முதல்வர் முக ஸ்டாலின் பெரும்பாலும் பேசியது, அதிமுகவின் ஊழலை குறித்துதான்.. குறிப்பாக 10 தொகுதிகளில் ஸ்டாலின் கொஞ்சம் டைம் எடுத்தே பிரச்சாரம் செய்தார்.

    அந்தந்த அமைச்சர்களின் தொகுதிகளுக்கே சென்று, ஊழல் செய்தவர்கள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யாமல் விடமாட்டோம் என்று விடாமல் சொல்லி கொண்டே இருந்தார்.

    ஊழல்

    ஊழல்

    எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறையில் மெகா ஊழல், ஓபிஎஸ் மீதான தாதுமணல் ஊழல் தொடங்கி பல வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த போவதாகவும் அதற்காகவே ஒரு லிஸ்ட் தயாராகி வருவதாகவும் 3 மாத காலத்துக்கு முன்பே சொல்லப்பட்டது.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இதில் முக்கியமான நபர் எஸ்பி வேலுமணிதான்.. விருதுநகரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது, ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 40 நிமிஷம் ராஜேந்திரபாலாஜி பற்றியேதான் கடுமையாக விமர்சித்தார்.. ஆனாலும் கோவையில் வேலுமணிக்கு ஸ்டாலின் வைத்த "செக் " பரபரப்பாக அப்போதே பேசப்பட்டது.. இந்த பேச்சுதான், திமுகவின் பிரச்சார போக்கையே அப்போது திசை திருப்பியது என்றும் சொல்லலாம்..

    வேலுமணி

    வேலுமணி

    எப்போதுமே ஸ்டாலின் அப்படி பேசமாட்டார்.. மென்மையும், தன்மையும், பக்குவமும், நாகரீக வார்த்தைகளுடனேயே ஸ்டாலின் பேசி பழக்கப்பட்டவர்.. அன்றைய தினம் இவையெல்லாம் இருந்தாலும்கூட ஏதோ ஒரு வேகம் அவர் பேச்சில் தென்பட்டது.. அவரது பேச்சே அன்று வித்தியாசமாக இருந்தது. "இது தான்டா திமுக... மிஸ்டர் வேலுமணி, திமுகன்ன என்னனு இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள ஜெயிலுக்குள்ள தள்ளுவேன்" என்றார்.

     சப்போர்ட்

    சப்போர்ட்

    அதுமட்டுமல்ல, வெளியே சொல்ல முடியாத அளவுக்கு 10 வருஷத்தில் ஊழலை செய்து வைத்துள்ளார் வேலுமணி என்றும், ஜக்கி வாசுதேவின் சப்போர்ட்டை நாடினாலும், திமுக இந்த விஷயத்தில் அவ்வளவு லேசில் விட்டுவிடாது என்றும் ஏற்கனவே சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் கசிந்தன..

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இந்த விஷயத்தில் திமுக எப்போது நடவடிக்கையில் இறங்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்தது.. அந்த வகையில், இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 விதமான தகவல்கள் பரபரத்தன.. ஒன்று, ஊழல் புகாருக்கு உள்ளான மாஜிக்கள், திமுக தரப்பில் சமாதான நடவடிக்கையில் இறங்கி தூது முயற்சியில் மும்முரமாகி வருவதாகவும், ஆனால், ஸ்டாலினிடம் வெள்ளைக் கொடி எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றும் தெரியவந்தது.

     வேலுமணி

    வேலுமணி

    முதலில் விராலிமலை விஜயபாஸ்கர், அடுத்து ராஜேந்திர பாலாஜி, அடுத்து வேலுமணி என ஒவ்வொருவரும் சமாதான தூது அனுப்பி இறுதியில் அந்த முயற்சியில் தோற்றுவிட்டதாகவும் தெரிகிறது.. அதேசமயம், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை என்ற வழக்கமான பேச்சுக்கு மட்டுமே இடம் தராமல், ஒவ்வொருவர் மீதான ஊழலுக்கும் வலுவான ஆதாரங்களை திரட்ட அனைத்து நடவடிக்கையிலும் இறங்கியது திமுக தரப்பு.. இதற்காகவே வலிமையான வழக்கறிஞர்கள் டீமையும் கையில் வைத்துள்ளது.

    மாஜிக்கள்

    மாஜிக்கள்

    எனவே, எந்த நேரத்திலும் மாஜிக்கள் மீதான நடவடிக்கை பாயும் என்று கணிக்கப்பட்ட நேரத்தில்தான், திடீரென சம்பந்தமே இல்லாமல், லிஸ்ட்டிலும் இல்லாத எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான அம்பு பாய்ந்தது.. இது அதிமுக தரப்பை கிறுகிறுக்க வைத்து, டெல்லிக்கே பறந்து செல்லும்படி கிலியை தந்துவிட்டது.. அப்போதுகூட வேலுமணி மீதான நடவடிக்கை எப்போது பாயுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. அந்த சமயத்தில் மேலும் ஒரு தகவல் வட்டமடித்தது.. பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க போவதால், இப்போதைக்கு மாஜிக்கள் மீது திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்று கூறப்பட்டது.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    காரணம், ஒருவேளை முன்கூட்டியே மாஜிக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பட்ஜெட்டின்போது சில முக்கியமான அறிவிப்புகள் வெளிவரும்போது, அவைகளை திசைதிருப்பி அதிமுக தரப்பு பிரச்சனை செய்ய வாய்ப்பாகிவிடும் என்பதால், பட்ஜெட் முடிந்தபிறகு திமுக தன் தரப்பு நடவடிக்கையை எடுக்கும் என்று முணுமுணுக்கப்பட்டது.. ஆனால், அந்த கணக்கும் இன்று காலை நொறுங்கி உள்ளது. அப்படியானால், திமுக வேறு ஒரு முடிவை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

    ரெய்டு

    ரெய்டு

    காலையிலேயே வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்க ஆரம்பித்துவிட்டது.. இது அதிமுக மேலிடம் எதிர்பார்க்காத ஒன்று.. திமுக தங்கள் மீதான வழக்கை கையில் எடுத்தால், நாங்களும் பதிலுக்கு திமுக சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை தூசி தட்டி எடுப்போம் என்று அதிமுக மேலிடம் ஏற்கனவே சொல்லி வரும் நிலையில், இனி அந்த கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

    திமுக

    திமுக

    திமுகவை பொறுத்தவரை கொங்குவை தன்வசப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.. ஒருபக்கம் மாற்று கட்சியினரை திமுகவில் கொண்டு வருவது, மற்றொரு பக்கம் திமுகவின் கட்டமைப்பை மேற்கு மண்டலத்தில் வலுப்படுத்துவது என்ற அதிரடிகளில் இறங்கி உள்ளது.. இதற்கு நடுவில் கொங்குவில் வலுவானவர்கள் மீதான ஊழல் புகார்களை வெளிக்கொணருவதன் மூலம், அதிமுகவின் செல்வாக்கு அங்கு சரியும் வாய்ப்புள்ளதுடன், திமுகவின் இமேஜ் எகிறவும் கூடும் என்பதே திமுகவின் கணக்காக உள்ளது.

    முதல்வர்

    முதல்வர்

    அந்த வகையில், எஸ்பி வேலுமணி மீதே நடவடிக்கையை திமுக தலைமை எடுத்துள்ளது, கொங்கு அதிமுகவையே அசைத்து பார்க்க வைத்து வருகிறது. இது நிச்சயம் திமுகசிவன் பழிவாங்கும் நடவடிக்கை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.. காரணம், ஆட்சிக்கு வந்ததுமே திமுக வேலுமணி மீது கை வைத்திருக்கும்.. ஆனால், அப்படி செய்யவில்லை.. அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தாலும், அந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சர்

    அமைச்சர்

    அதுமட்டுமல்ல, அமைச்சராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது, அந்த வழக்கின் விசாரணையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது..

     கொங்கு மண்டலம்

    கொங்கு மண்டலம்

    திமுகவின் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கு வலுவாக பதிவாகியும் உள்ளது... அதாவது அனைத்துமே சட்டரீதியாக நடந்து வருவதையே இந்த ரெய்டின் போக்கு காட்டுகிறது.. இதை அதிமுக எப்படி எதிர்கொள்ளும்? திமுகவின் அடுத்த டார்கெட் என்ன? கொங்குவில் நினைத்ததை திமுக சாதிக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+