"சிக்கிய மேட்டர்?".. அதென்ன ஹார்ட் டிஸ்க்குகள்?.. வேலுமணியிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
எஸ்பி வேலுமணியின் நமது அம்மா அலுவலகத்திலும் ரெய்டு நடக்கிறது
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் தொடர்ந்து 8 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதையடுத்து அதிமுகவில் ஒருவித பரபரப்பும, கலக்கமும் தொற்றி கொண்டுள்ளது.
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதுமே இப்படி ஒரு ரெயிடு வேலுமணி தரப்பில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது... ஆனால் கொரோனா பிரச்சனை வந்ததுமே இது சற்று தள்ளி போடப்பட்டது.. அப்போதுகூட ஸ்டாலின் அவசரப்படவில்லை.
காரணம், இப்போதைக்கு அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாம் என்று ஸ்டாலின் நினைத்தாராம்.. உடனே நடவடிக்கை எடுத்தால், கைது நடவடிக்கை பின்னாடியே வரும்.. ஆனால், ஓரிரு மாதங்களிலேயே பெயிலில் வெளியில் வந்துவிடக்கூடும்.

மக்கள்சபை
எனவே, வெளியில் வர முடியாத அளவுக்கு வலுவான ஆதாரங்கள் மேலும் திரட்ட வேண்டும், அந்த ஆதாரங்களை மக்கள் சபையில் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும், அதன்பிறகு, ஊழல் தொடர்பானோர் மீது நடவடிக்கை எடுத்தால் அதுதான் இதற்கெல்லாம் நிஜமான தீர்வாக இருக்கும் என்று ஸ்டாலின் வலஆழமாக நம்பி உள்ளார். அதன்படியேதான் முக்கியமாக சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளும் நகர்ந்துள்ளன.

வெள்ளை கொடி
வெள்ளைக்கொடிக்கும் திமுக மேலிடத்தில் எடுபடாத நிலையில், கடந்த சில வாரங்களாகவே வேலுமணி, வக்கீல் அணி துணையுடன் தான் வலம் வந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கோவை அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வழக்கறிஞர் அணிக்கு என்றே ஸ்பெஷலாக ஒரு ஆபீஸ் திறந்தும் தந்துள்ளார்.. அடிக்கடி இங்கு வந்து அந்த டீமுடன் ஆலோசனையும் நடத்தியபடியே இருந்திருக்கிறார்.. இதெல்லாம் எதற்காகவென்றால், எப்போது வேண்டுமானாலும் திமுக தன் மீது ரெய்டு நடத்தும் என்று வேலுமணி அலர்ட் ஆகவே இருந்தாராம்.

ஃபைல்கள்
அதுமட்டுமல்ல, திடீரென வேலுமணி மீதான ஊழல் புகார்களுக்கான ஆதாரமாக விளங்கக் கூடிய முக்கிய ஃபைல்கள் சில காணவில்லை என்று பகீர் புகார் ஒன்றை யாரோ கிளப்பிவிட்டார்கள்.. பிறகு, வேலுமணியை வெற்றி பெற வைத்ததில் சில திமுக புள்ளிகளே கருப்பு ஆடுகளாக தற்போதும் உடந்தையாக இருக்கிறார்கள் என்றார்கள்.. இப்படி இந்த 2 மாத காலத்தில் நிலவிய எத்தனையோ பரபரப்புகள், யூகங்கங்கள் சந்தேகங்கள், அனுமானங்களுக்கு நடுவேதான் இன்றைய தினம், அதிரடி ரெய்டு துவங்கி உள்ளது.

தொடர் விசாரணை
வேலுமணியுடன் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகின்றனர்.. இப்போதைக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத்துறை பதிவு செய்துள்ள எப்ஐஆரில் வேலுமணியின் பெயர், குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபரை குறிக்கும் "ஏ1" ஆக சேர்க்கப்பட்டுள்ளது.. மேலும் தொடர்ந்து 8 மணி நேம் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

டெண்டர்
வேலுமணி தனக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு பணிகள் கொடுத்ததன் மூலம் டெண்டர் மதிப்பை விட 50 முதல் 100 சதவிகித தொகை அதிகமாக பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில்தான் உறுதியாக தெரியவருமாம். எனினும், டெண்டர் ஒதுக்குவதில் ஏராளமான முறைகேடு ஏற்பட்டுள்ளது என்பதால் அது தொடர்பான ஏராளமான ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

8 மணி நேரம்
இப்போதைக்கு சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் வீட்டில் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.. அதேபோல, அரும்பாக்கம் கான்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் நடந்த சோதனையும் நிறைவு பெற்றுள்ளது... எம்ஆர்சி நகரில் உள்ள வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீட்டிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது... விசாரணையில் வெளிவந்த தகவல்களை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை.. அதேசமயம், இதெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக ஒருபக்கம் சொல்லி கொண்டே இருக்கிறது..

ஜெயலலிதா
ஆனால் மறுபுறமோ, திமுக அசராமல் உள்ளது.."ஊழல் செய்யவில்லை என்றால், அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டியதுதானே.. நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம்.. 66 கோடி ரூபாய்க்கே ஜெயலலிதாவுக்கு 4 வருஷங்கள் வருடங்கள் தண்டனை கிடைத்தது.. இதுவோ, பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு... அதனால் எத்தனை வருடங்கள் கிடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்று ஒரு தனியார் டிவிக்கு, ஆர்எஸ் பாரதி அளித்த பேட்டியானது இன்றைய தினம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. "அடுத்தது யாரோ" என்ற கேள்வியுடன் அதிமுகவின் கலக்கம் தொடர்கிறது..!












Click it and Unblock the Notifications