முதல்முறையாகக் காகிதமில்லா இ பட்ஜெட்.. விறுவிறுவென தயாராகும் சட்டசபை.. சபாநாயகர் அப்பாவு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாகக் காகிதமில்லா இ பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இதற்காக தமிழ்நாடு சட்டசபையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைச் சபாநாயகர் அப்பாவு, துணைச் சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. அதேபோல தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டும் அதற்கு மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ளது.

Speaker Appavu and Deputy Speaker Pichandi inspected TN assembly which is ready for its e-budget

இந்த இரண்டு பட்ஜெட்டும் முதல்முறையாக இ பட்ஜெட் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் சட்டசபையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர் மேஜை முன்பும் தனியாகக் கணினி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல படிப்படியாகச் சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளிலும் காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடருக்குத் தமிழ்நாடு சட்டசபை தயாராகி வரும் நிலையில், இந்த பணிகளைச் சபாநாயகர் அப்பாவு துணைச் சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+