மாற்றப்பட வேண்டியவர் சபாநாயகர் அப்பாவு தான், ஆளுநர் அல்ல! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
சென்னை: உடனடியாக மாற்றப்பட வேண்டியவர் சபாநாயகர் அப்பாவு தான்.. ஆளுநர் அல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் கவிதை வடிவில் ட்வீட் பதிவிட்டு திமுக அரசை விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டம் தொடங்கியது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு உள்ளது. இதனால், தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையாற்ற இருந்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று அவை கூடியதும் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

முதலில் ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். தொடர்ந்து முழுமையாக வாசிக்காமல் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
மேலும், தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்ற ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் ஆர் என் ரவி தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே சட்டசபையை விட்டு வெளியேறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆளுநர் விளக்கம்: அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப் பேரவையில் நடந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார்.
உரையில் 'உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தது. இதனால் அந்த உரையை ஆளுநர் வாசிக்கவில்லை. பிப்ரவரி 9 ம் தேதியன்று மாநில அரசிடம் இருந்து பெறப்பட்ட உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்தது. ஆளுநர் உரையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை சுட்டிக்காட்டியும் தவறுகள் திருத்தப்படவில்லை. தவறான தகவல்களுடன் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் இருந்ததால் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் படிக்கவில்லை.
மருது அழகுராஜ் விமர்சனம்: தவறான தகவல்களை படிப்பது அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கிவிடும்” என்று கூறப்பட்டு இருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமனறத்தில் நடந்து கொண்ட விதம் அரசியல் சாசனத்தை மீறும் விதமாக உள்ளதாக தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஆளுநருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக கவிதை வடிவில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மருது அழகுராஜ் கூறியதாவது:-
உதயநிதிக்கு முதல்வருக்கு மேலான முன்னுரிமை: மாற்றப்பட வேண்டியவர்யார்?.. சாவர்கர், கோட்சே என்றெல்லாம் பேசி சட்டசபையை பொதுக்கூட்ட மேடையாக்கி இருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இந்த லட்சணத்துல ஆளுநர் மரபை மீறிவிட்டார் என்று குற்றச்சாட்டு சொல்கிறது தி.மு.க. அப்படி என்ன தான் மரபை மீறினாரு. தமிழ்தாய் வாழ்த்தோடு சேர்த்து தேசியக் கீதத்தையும் பாடுவோம்னு சொல்லியிருக்காரு. இதுல என்ன பெரிய மரபு மீறல் இருக்கு. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதியை நியமனம் செய்து கொண்டு முதலமைச்சருக்கு மேலான முன்னுரிமையை தர்றீங்களே இதெல்லாம் மரபுமீறல் இல்லையோ?
மாற்றப்பட வேண்டியவர் சபாநாயகர்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டு அதைத்தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்ட சி.ஏ.ஏ. சட்டத்த தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என எழுதப்பட்ட வாசகத்தை குடியரசு தலைவரின் பிரதிநிதியான ஆளுநரையே வாசிக்கச் சொன்னா அவர் அத எப்படி வாசிப்பாரு. அதனால உடனடியாக மாற்றப்பட வேண்டியவர் சபாநாயகர் அப்பாவு தான்.. ஆளுநர் அல்ல. என்ன நான் சொல்றது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications