தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க இன்று இறுதி சிறப்பு முகாம்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளா் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அறிவித்த சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஏராளமான மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிகளுக்காக வரைவு பட்டியல் கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடி அமைவிடங்களில் கடந்த நவம்பா் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தது.. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக மட்டும் இரண்டு நாள்களிலும் சோ்த்து 13 லட்சத்து 46 ஆயிரத்து 907 விண்ணப்பப் படிவங்கள் அளிக்கப்பட்டன.

நவம்பா் மாதத்தைத் தொடா்ந்து, டிசம்பா் மாதத்திலும் இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது இதன்படி சனிக்கிழமையான நேற்று (டிச. 12) தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமின் போது, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த வாக்குச் சாவடி முகவா்கள் வாக்காளர் பட்டியலுடன் அமா்ந்திருந்தனா். வாக்காளா்களுக்கு உதவிடவும், பெயா் சோ்ப்பு, நீக்கலுக்குத் தேவையான விவரங்களை அளிக்கவும் முனைப்புக் காட்டினார்கள். ஆனால் மற்ற கட்சிகள் இதை பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், இன்றும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி இதுவே கடைசி சிறப்பு முகாமாகும். விடுமுறை தினம் என்பதால் வாக்காளா்களும், பொது மக்களும் அதிகளவு திரண்டு வந்து விண்ணப்பங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று. நடந்தமுகாமில் ஏராளமான இளைஞா்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்றார்கள். எனவே இன்றும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

சிறப்பு முகாம்கள் நிறைவடைந்தாலும், தமிழகத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்கள், சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் இணையதளம் வழியாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அளிக்கலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications