"தர்மசங்கடம்".. கவர்னர் ரவியின் அடுத்த ஸ்கெட்ச்.. நொறுக்கி தள்ள ரெடியாகும் திமுக.. அப்ப "உதயநிதி"?
ஆளுநர் ரவி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்கிறார்கள்
சென்னை: அண்ணா பல்கலையின் பட்டமளிப்பு விழா விரைவில் நடக்க உள்ள நிலையில், இதற்கான எதிர்பார்ப்புகள் தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
மாநில பிரச்சனைகளை கையாளுவது ஆளுநரா? முதல்வரா? மாநில ஆளுநரின் எல்லைகள் எதுவரை என்ற விவகாரம் தற்போதுதான் ஓய்ந்துள்ளது..
ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.. அதனால்தான் ஆளுநரை, "ஹெட் ஆஃப் தி ஸ்டேட்" என்கிறோம்..

தேநீர் விருந்து
எனவேதான், பேரறிவாளன் விவகாரத்தில்கூட, இன்றைய ஆளுநரை கடிந்து கொண்டதுபோல், இதற்கு முன்பு சுப்ரீம்கோர்ட் வேறு எந்த ஆளுநரையும் நேரடியாக, பகிரங்கமாக, குற்றம்சாட்டியது இல்லை.. ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று நீதிபதிகள் இன்று சொல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. நீட் விவகாரத்திலும் இப்படித்தான்.. ஆளுநரின் தேநீர் விருந்தை மாநில கட்சிகள் புறக்கணித்ததாக வரலாறு இல்லை.

ஆர்எஸ்எஸ்
இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் சூழலில்தான், சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடக்க போகிறது.. கடந்த 2021-ம் ஆண்டிற்கான, இளங்கலை, முதுகலை, பிஎஹெச்டி பட்டங்கள் முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருக்கிறது.. அதாவது, பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, அடுத்த 6 மாதங்களுக்குள் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பது அப்பல்கலையின் விதியாகும்.. ஆனால், கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு ஒருவருடமாகவே சான்றிதழ் வழங்கவில்லை என்ற புகார்கள் வெடித்தன.

பர்மிஷன்
இதற்கு 2 காரணங்கள் சொல்லப்பட்டது. ஒன்று, இந்த பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுர் ரவி அனுமதி அளிக்காததால்தான் தள்ளிப்போவதாக கூறப்பட்டது. மற்றொரு பக்கம், உதயநிதி விவகாரம் குறித்தும் யோசிக்கப்படுவதால், இந்த விழா தள்ளி போவதாகவும் சொன்னார்கள்... காரணம், பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்..

சிண்டிகேட் - உதயநிதி
ஆனால், விழாவை நடத்தினால், உதயநிதியை மேடையேற்றி வர வேண்டி இருக்குமே, அப்படியே மேடையேற்றினாலும், அவரை பேசவைக்க பொன்முடி தரப்பில் அழுத்தம் தரப்படுமே என்பதால், ஆளுநர், அமைச்சர், துணைவேந்தர் தவிர வேறு யாரும் மேடையில் பேசக்கூடாது, அதிலும், சிண்டிகேட் உறுப்பினர்களை மேடையிலேயே ஏற்றக் கூடாது என்பதில் கறார்தன்மை காட்டப்படுவதாக ஒரு தகவல் பரபரத்து கிடந்தது.

சைலண்ட் ஏற்பாடுகள்
மற்ற பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடந்துவரும்போது, அண்ணா பல்கலைக்கு மட்டும் விழா எப்போது, ஏன் தள்ளி போகிறது? என்ற பல சந்தேகங்கள் வட்டமடித்தபடியே இருந்தன.. இந்நிலையில், வரும் 29-ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 28-ம் தேதி மகாபலிபுரத்துக்கு ஒலிம்பியட் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் வருகிறார்.. அதற்கு மறுநாளே அண்ணா பல்கலைக விழாவிலும் பங்கேற்க போவதாக தகவல்கள் வந்தன. விவேகானந்தர் அரங்கில் இந்த 42வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது..

ஒரே மேடை
இதற்கான அழைப்பை பிரதமருக்கு ஆளுநர் ரவி விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. அண்ணா பல்கலையில் இது முழுக்க முழுக்க ஆளுநரின் விழா என்றாலும், பிரதமர் பங்கேற்பது உட்பட இதுகுறித்து திமுக அரசிடம் ஆளுநர் தரப்பு எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.. இது திமுகவுக்கு ஒரு வருத்தத்தையும் தந்துள்ளதாம்.. எனினும், பிரதமர், ஆளுநர், முதல்வர் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொன்முடி
ஏற்கனவே திமுக அமைச்சர்களுக்கும், ஆளுநருக்கும், மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக சலசலப்புகள் எழுந்து அடங்கின.. வார்த்தை போர்கள் நடைபெற்று முடிந்தன.. மாணவர்களிடையே அரசியலை ஆளுநர் புகுத்துகிறார் என்று பொன்முடியும் பகிரங்கமாகவே குற்றச்சாட்டை வைத்திருந்தார்.. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது மரபு என்ற நிலையில், இது எதையும் கடைபிடிக்காமல், கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? என்று கேட்டிருந்தார்.

திருமாவளவன்
இதைதவிர, சனாதன தர்மம் மற்றும் திராவிட அரசியல் குறித்து ஆளுநரின் பேச்சுக்கு, திருமாவளவன் உட்பட பலரும் ஆளுநர் விவகாரம் குறித்து தொடர்ந்து கடுமையாக சாடிவந்தனர். இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்க போகிறார்கள்.. அதேசமயம், கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்களா தெரியவில்லை.. அன்றைய தினம், இந்த மேடையில், திமுக தரப்புக்கான பதிலை ஏதாவது ஆளுநர் தரப் போகிறாரா? அல்லது பிரதமர் என்ன பேச போகிறார்? என்ற ஆர்வம் அதிகமாக எழுந்துள்ளது.. அத்துடன் சிண்டிகேட் உறுப்பினர் உதயநிதியின் முக்கியத்துவம் அன்றைய தினம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. பார்ப்போம்...!!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications