4 "சாமிகள்".. ஆரம்பமே பாஜக சுப்பிரமணிய சாமிதான்.. எச்.ராஜாவை பார்த்தீங்களா.. கடைசியிலதான் ஹைலைட்டே
4 சாமிகளை குறிப்பிட்டு எச் ராஜா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது
சென்னை: எச்.ராஜா ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. மொத்த பேரும் திரண்டு சென்று எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்..!
கடந்த சில தினங்களாகவே, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் அவரது மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷன் நடந்து கொண்டிருக்கிறது..
இது தொடர்பான செய்திகளும், ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த பதில்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதை மையமாக வைத்துத்தான் எச். ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்.

சாமிகள்
அந்த ட்வீட்டில், "கேட்டதில் ரசித்தது. சுப்பிரமணிய சுவாமியாக வந்து வழக்கு தொடர்ந்தாய். குமாரசாமியாக விடுதலை செய்தாய் பழனிச்சாமியாக வந்து கமிஷன் போட்டாய் ஆறுமுக சாமியாக விசாரிக்கிராய் முருகா உண் திருவிளையாடவின் மகிமையே மகிமை" என்று பதிவிட்டுள்ளார். இதில் மொத்தம் 5 சாமிகள் இடம்பெற்றுள்ளனர்..

சென்னாரெட்டி
சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது, ஜெயலலிதா மீது அன்று வழக்கு போட முதன்முதலில் அனுமதி கேட்டதே சுப்பிரமணிய ரெட்டிதான்.. ஆளுநர் அதற்கு அனுமதி தந்துமே, சுப்பிரமணியசாமிதான் இது தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்தார்... எப்போதுமே சேம்சைட் கோல் போடும் சு.சாமி, ஜெ.விஷயத்தையும் விட்டு வைக்கவில்லை.. அதனால்தான் முதல் பெயராக சுப்பிரமணியசாமியை எச்.ராஜா
கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆதாரங்கள்
இதற்கு பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானாலும், வலுவான ஆதாரங்கள் இருந்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்தவர் கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி... எனவே இவர் 2வது பெயராக சேர்க்கப்பட்டிருக்கலாம். ஜெ.இறந்தபிறகு, அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க கோரி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை நியமித்ததே எடப்பாடி பழனிசாமிதான்..

ஓபிஎஸ்
அதிமுக ஆட்சியில் இருந்தவரை, 5 வருடமாக ஆறுமுகசாமி இந்த வழக்கை விசாரித்து கொண்டே இருந்தார்.. ஆனால் அத்தனை காலமும் ஆஜராகாத ஓபிஎஸ், திமுக ஆட்சிக்காலத்தில்தான் ஆஜராகி உள்ளார்.. ஜெயலலிதா குறித்த ஆட்சி மற்றும் வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சாமிகள்.. அதாவது முருகரின் வேறு வேறு பெயர்களை கொண்டவர்கள்.. அதனால்தான் இப்படி சாமி ட்வீட்டை போட்டு கலாய்த்துள்ளார் எச்.ராஜா.

ராமசாமி
இந்த ட்வீட்டுக்கு ட்விட்டர்வாசிகள் பலரும் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.. "ராமசாமியாக (EV) வந்து பகுத்தறிவு ஊட்டினாய் . இதையும் சேர்த்துக்கோங்க" என்று கேட்டுக் கொண்டு வருகின்றனர். "உன்" என்பதற்கு "உண்" என்று பதிவிட்டு இருக்கிறீர்கள், எழுத்துபிழையோடு மட்டும் அல்ல கருத்து பிழையும் உங்களிடத்தில் உள்ளது.. உண் என்றால் - உணவு , சாப்பிடுவது உள்ளிட்ட எனைய பொருள்களுக்கான பதம் என்று எச்.ராஜாவுக்கு தெரிவித்துள்ளார்.

குன்ஹா
இன்னொருவரோ, இத்தனை சாமி அம்மாவிற்கு துணையாக வந்தாலும் சுப்பிரமணிய சாமிக்கு துணையாக வந்தது குன்ஹா என்ற ஏசுநாதர் தான் என்று பதிவிட்டுள்ளார்.. மேலும் சிலரோ, இந்த டிவீட்டில் நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.. அதை முதலில் சரி செய்துவிட்டு வரவும் என்றும் பதிவிட்டுள்ளார்.. ஆக மொத்தம் எச்.ராஜா ட்விட்டர் பரபரப்பாக காணப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications