‛‛களமிறங்கியது ஸ்பெஷல் டீம்’’.. ரயில் டிக்கெட் முன்பதிவு பயணிகள் நிம்மதி.. சென்னையில் அதிரடி ஆக்ஷன்
சென்னை: சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பலர் ஏறி பயணித்து வருகின்றனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று ஸ்பெஷல் டீம் களமிறங்கி அதிரடி ஆக்ஷனை மேற்கொண்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
நம் நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். சாதாரண பெட்டி, முன்பதிவு பெட்டி, ஏசி பெட்டி என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் ரயில்வே சேவைகளை வழங்கி வருவது தான் இதற்கு காரணம். அதோடு விமானம், பஸ் உள்ளிட்ட கட்டணத்தை ஒப்பிடும்போது ரயில்வேயின் டிக்கெட் கட்டணம் குறைவாகும். இதனால் காலம் காலமாக ரயில் பயணத்துக்கு தனி மவுசு இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் சமீப காலமாக ரயிலில் பயணிக்கும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ரயில்களில் முன்பதிவு இல்லாத சாதாரண பெட்டிகள் குறைவாக உள்ளதால் ஒரே பெட்டியில் அதிகமானவர்கள் பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு இருக்கை இன்றி நின்றபடி பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்னும் சிலர் சாதாரண பெட்டியில் கூட்டம் இருப்பதால் உரிய டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டிகள் அல்லது ஏசி கோச்களில் ஏறி பயணிக்கின்றனர். ஒரு காலத்தில் வடமாநிலங்களில் தான் இத்தகைய நிலை இருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் இந்த சூழல் உருவாகி உள்ளது. இதனால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை - குமரி எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்களில் இத்தகைய பிரச்சனையை முன்பதிவு பெட்டிகளில் பயணித்த பயணிகள் எதிர்கொண்டனர்.

இதுதொடர்பாக வீடியோக்கள் வலைதளங்களில் வெளியானதோடு, புகார்கள் குவிந்த நிலையில் ரயிலின் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் ரயில்வே சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு டிக்கெட் பரிசோதகர்கள் அடங்கிய ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது. இந்த ஸ்பெஷல் டீம் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணிப்பவர்களை கண்டுபிடித்து கீழே இறக்கி வருகிறது.

அந்த வகையில் தான் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ஸ்பெஷல் டீமை சேர்ந்தவர்கள் திடீரென்று டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். சென்னை சென்ட்ரலில் இருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்ட ரயலில் முன்பதிவு பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள் பயணிப்பதாக புகார் கிளம்பியது. இதையடுத்து ஸ்பெஷல் டீம் களமிறங்கி சோதனையை மேற்கொண்டது.

இந்த சோதனையின்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்தவர்கள் மற்றும் சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டிகளில் இருந்தவர்கள் அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களை அதிகாரிகள் ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். இத்தகைய சோதனை சென்னை மட்டுமின்றி பிற இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணிப்பதை கைவிட வேண்டும் என்று ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை டூ நெல்லை வந்தே பாரத்தில் பிரேக் பழுது.. நடுவழியில் நின்ற ரயில்! பரிதவித்த பயணிகள் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications