சென்னையில் இருந்து வெள்ளிதோறும் சிறப்பு ரயில்! சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! எந்த ரூட் தெரியுமா
சென்னை: சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் வரை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் எப்போது புறப்படும்? எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னையில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சிறப்பு ரயில்
அதாவது, வரும் 14 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் ஜங்சன் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான கால அட்டவணையும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
வண்டி எண் 0611/06112 சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையம் வந்தடையும். மொத்தம் 10 சேவைகள் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
எங்கெல்லாம் நின்று செல்லும்?
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து சனிக்கிழமை (நவம்பர் 15) இரவு 7.15 மணிக்கு புறப்படும் ரயிலில், சென்னை எழும்பூருக்கு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு வந்து சேரும். ஜனவரி 17 ஆம் தேதி வரை மொத்தம் 10 சேவைகளாக இந்த ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு அதிகாலை 4.57 மணிக்கு வந்து சேரும். சேலத்தில் இருந்து 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திரிசூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், காயன்குளம் வழியாக கொல்லத்திற்கு 4.30 மணிக்கு சென்றடையும்.
ஏசி பெட்டிகள் எத்தனை
மேற்குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும். மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் 2 ஏசி பெட்டிகள் (Two tier), 8 ஏசி ( Three tier) பெட்டிகள், 6 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பொதுப்பெட்டி, 1 லக்கேஜ் கம்-பிரேக் வேன் பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இருக்கும்.
சபரிமலை மண்டல சீசன்
சபரிமலையில் வருகிற 17-ம் தேதி மண்டல சீசன் தொடங்குகிறது. இதற்காக 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 27- ம் தேதி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கேரளா செல்வார்கள் என்பதால் சபரிமலை பக்தர்கள் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications