ஏசி எங்கேடா? மஞ்ச தாலி கட்ட போன மாப்ளை.. வெடவெடனு கை கால் உதறி.. இப்படியும் எங்காச்சும் நடக்குமா
சென்னை: எத்தனையோ திருமணங்கள், மணமேடைகள் வரை வந்து நின்று விடுகின்றன. குறிப்பாக, தாலி கட்டுவதற்கு இறுதி நொடியிலும் திருமணங்கள் நின்று போகின்றன... சில சமயம் சம்பந்தப்பட்ட மணப்பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். இதுபோன்ற சோகமான மற்றும் விநோதமான திருமண நிகழ்வுகள் இணையத்திலும் வைரலாகிவிடும். அந்தவகையில், 2 திருமணங்கள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டுள்ளன.. என்ன நடந்தது?
பீகாரின் கைமூர் பகுதியை சேர்ந்தவர் பவன்குமார்.. இவருக்கு நேற்று முன்தினம் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தின்போது 'சிந்தூர் தானம்' (மணமகளின் நெற்றியில் குங்குமம் பூசுதல்) என்ற சடங்கு நடந்தது..

மாப்பிள்ளை ஊர்வலம்
இதற்காக மணமகன் பவன்குமார் வீட்டார் மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.. பிறகு சடங்கு தொடங்கியதுமே, குங்குமம் பூச கைகளை உயர்த்தியபோது திடீரென மாப்பிள்ளையின் கை நடுங்கத் தொடங்கியது.. கை வெடவெடவென நடுங்குவதை கண்டு மணப்பெண் பதறிப்போனார்..
உடனே மணமகனை மென்டல் என்று சொன்னதுடன், உடனே இந்த கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று கதறி அழுதார் மணமகள். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றும், கல்யாணத்தை நிறுத்துவதிலேயே மணப்பெண் உறுதியாக இருந்தார்.
இறுதியில் திருமணமும் நிறுத்தப்பட்டது.. உடனே தகவலறிந்து வந்த போலீசார் இரு வீட்டினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. அப்போது மணமகன் வீட்டில், ரிசப்ஷன் உட்பட எல்லா சடங்குகளும் முடிந்துவிட்டது. இப்போதுவந்து மாப்பிள்ளைக்கு கை நடுங்குவதாக சொல்லி திருமணத்தை நிறுத்த பார்க்கிறார் மணப்பெண்.. இது எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று குற்றஞ்சாட்டினார்கள்.
10 பைசா கிடையாது
அதற்கு மணமகள் வீட்டினர், எங்கள் மகளுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை.. பிடிக்காத பெண்ணை என்ன சொல்லி கட்டாயப்படுத்துவது? திருமணத்துக்காக நாங்கள் தந்த வரதட்சணையை திருப்பி தர சொல்லுங்கள் என்றார்கள்.
உடனே மாப்பிள்ளையின் அப்பா, "கல்யாணத்துக்கு ரூ.1 லட்சம் வரதட்சணை என்று பேசி, ரூ. 90,000 மட்டுமே தந்தார்கள்.. ஆனால் நாங்கள் ரூ.30,000 பட்டுப்புடவை, ரூ.20,000, டிஜே கச்சேரி, ரூ.10,000 போக்குவரத்து செலவு செய்துட்டோம்.. எனவே 10 பைசாகூட தங்களிடம் இல்லை: என்று சொல்லிவிட்டார்கள். இரு தரப்பினருமே பிரிவதில் உறுதியாக இருந்ததால், போலீசாரும் அவர்களை தனித்தனியாக பிரித்து அனுப்பி வைத்துவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது..
மூச்சுத் திணறல்
அதேபோல, உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இதேபோல ஒரு சம்பவம் நடந்தது.. மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்காக, மணமகள் வீட்டினருக்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.. அப்போது மணப்பெண் ரூமில் ஏர்கண்டிஷனர் இல்லை என தெரிகிறது. இதனால், கடுமையான உஷ்ணம் ஏற்பட்டு, மணப்பெண்ணுக்கு மூச்சுத்திணறலே வந்துவிட்டதாம்.
கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாத குடும்பம்.. உடனே ஏசி வேண்டும் என்று மணப்பெண் கேட்டிருக்கிறார். திடுதிப்பென்று ஏசி கேட்கவும், உடனே ஏற்பாடு செய்ய முடியாத சூழல் மணமகன் வீட்டினருக்கு ஏற்பட்டுள்ளது.. பிறகு இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் வெடித்தது.. இதுகுறித்து போலீசாருக்கும் விஷயம் சென்றது..
தோல்வி பேச்சுவார்த்தை
போலீசாரும் நேரடியாகவே சம்பவ இடத்துக்கு கிளம்பி வந்து சமரசம் மேற்கொண்டனர்.. ஆனால், தோல்வியே கிடைத்தது.. இதுகுறித்து போலீசார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது:
"தனக்கு மரியாதை இல்லாத, அடிப்படை வசதிகூட ஏற்பாடு செய்ய முடியாத வீட்டில் எப்படி வாழ்வது? அங்கு சென்று வாழ்ந்தால், தன்னுடைய வாழ்க்கையே நரகமாக மாறும் என்று திடமாக சொன்னார் மணப்பெண்.. அத்துடன், மணமகனின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்பதாக கூறி மணமகளின் அம்மா, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் விசாரணையும் நடந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications