ஒன்னும் பிரச்சினையில்ல..அமித்ஷாகிட்ட பேசிட்டேன்! வெயிட் பண்ண சென்னார்! சிரிக்காமல் பேசிய ஜெயலட்சுமி
சென்னை: உயிலில் என்ன இருக்கிறதோ அதுபடி செய்து கொடுங்கள் என அமித்ஷாவிடம் சொல்லியுள்ளதாகவும், அதிமுக அம்மாவின் ஆட்சி இருக்கக் கூடாது என்பதுதான் எடப்பாடியில் குறிக்கோள் என கூறியுள்ளார் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி வரும் ஜெயலட்சுமி. மேலும், ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர் மீது ஏதாவது ஒரு பழியை போடுகிறார் எடப்பாடி எனவும், பொங்கல் முடிந்ததும் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் அதிரடியாக பேசியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," நேற்று என்னை அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள். நான் எனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என நான் கேட்கவில்லை. ஒரு எம்எல்ஏ கலந்தாய்விற்கான ஃபார்ம் கொடுத்தேன். பணம் கட்டி தான் பார்ம் வாங்கியுள்ளேன்.
அன்று என்னை தடுத்திருக்கலாம் நான் தனியாகத்தான் சென்று மரியாதை கொடுத்து நடந்து கொண்டேன். நேர்காணலுக்கு வருவதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நான் போனவுடன் கதவு மூடப்பட்டது காரின் கதவை அடித்தார்கள். இங்கிருந்து போ என துரத்தினார்கள்.

ஜெயலலிதா மகள்
கேகுல இந்திரா நான் வந்திருப்பது தெரிந்து தான் இருக்கையில் இருந்து எழும்பி சென்று விட்டார். அங்கு சென்று கொடுத்தேன்.அங்கிருந்தும் வெளியே சென்று விட்டார்கள். எனக்கு சாதாரண எம்எல்ஏ சீட்டு போதும் மக்களுக்கு சேவை செய்வதற்கு முதலமைச்சர் பதவி தேவையில்லை. என்னை அசிங்கப்படுத்தியதற்கான காரணத்தை எடப்பாடி பழனிச்சாமி கூற வேண்டும்.
அதிமுக உள்கட்சி மோதல்
நான் செல்லும் இடங்களில் எல்லாம் தனி கட்சி ஆரம்பிக்க வேண்டாம். அம்மாவின் கட்சிக்குள்ளையே வந்து விடுங்கள் என கூறியதால் தான் நானும் தனி கட்சி ஆரம்பித்து அதிமுகவின் ஓட்டுகளை சிதறடிக்க வேண்டாம் என்று தான் புதிய கட்சி துவங்கவில்லை. யார் சொல்லியும் நான் மனு கொடுத்த செல்லவில்லை நானாகத்தான் சென்றேன். தேனி போடிநாயக்கனூர் பகுதியைச் சார்ந்த ஞானவேல் ராஜா என்பவரிடம் உயில் உள்ளது விரைவில் அதை வெளியிடுவேன்.
எடப்பாடி பழனிச்சாமி
வாரிசாக இருந்தால் அதிமுகவில் இருக்க வேண்டும் என விதி உள்ளதா? என கேட்ட பொழுது எனக்கு எந்த பதவியும் வேண்டாம். எனக்கு எங்க அம்மாவின் ஆட்சி மலர வேண்டும். ஒரு சிறிய எம்எல்ஏ பதவி கொடுத்தால் போதும். கொடநாடு சம்பவம் அனைவருக்கும் தெரியும் அம்மாவின் நகைகள் ஆவணங்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது திருடப்பட்ட அனைத்தும் சாமுண்டீஸ்வரி என்பவரிடம் இருக்கிறது.
அமித்ஷா சந்திப்பு
அம்மா கட்சி வெற்றி பெறக் கூடாது என்பதுதான் எடப்பாடியின் குறிக்கோள். சசிகலா கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றதாக கூறி விட்டார்கள். ஆனால் அவரிடமிருந்து பதவி எடுத்துக் கொண்டார்கள். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து பேசினேன். நான் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசும் பொழுது ஒரு வாரம் பொறுத்திருங்கள்" என கூறினார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications