மின்தடைக்கு அணிலை காரணம் காட்டிய செந்தில் பாலாஜிக்கு ஒரு நோபல் பரிசு பார்சல் - செல்லூர் ராஜூ
எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: அணில்களில் மின்கம்பிகளின் மீது ஓடுவதால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என மாஜி அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலடித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டவர் செல்லூர் ராஜூ. அவரே தற்போது கிண்டலாக பேச ஆரம்பித்து விட்டார்.
Recommended Video
தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின்தடை ஏற்படுவதாக கூறினார்.

அணில்களால் ஏற்படும் மின் தடை உலக அளவில் மின் வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று கூறினார். இதை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தார். செந்தில் பாலாஜியின் கருத்தை அதிமுகவினர் மட்டுமல்லாது சமூக வலைத்தளத்தில் பலரும் ட்ரோல் செய்தனர்.
அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கிண்டலடித்தார்.
செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்து விட்டேன் என்று கூறிய அவர், எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன என்றும் நையாண்டி செய்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications