திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் திடீரென்று விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த திடீர் விலகலின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே போட்டி உள்ளது.

srithar-vandayar-moovendar-munnetra-kazhagam-supports-to-aiadmk-allinace-after-dispute-with-dmk-alli

தற்போது அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியேறிய மூவேந்தர் முன்னேற்ற கழகம்

இதற்கிடையே தான் தற்போது திமுக கூட்டணியில் இருந்து ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் வெளியேறி உள்ளது. திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிட வாய்ப்பு கோரியது. இதுதொடர்பாக திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனால் திமுக எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.

அதிமுகவில் ஐக்கியம்

இதையடுத்து அந்த கட்சியின் தலைவரான ஸ்ரீதர் வாண்டையார் தனது ஆதரவாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்ரீதர் வாண்டையார் சந்தித்து தேர்தலில் ஆதரவு வழங்கினார்.

முதல் முறையல்ல

மூவேந்தர் முன்னேற்ற கழகம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு கும்பகோணம் தொகுதி வழங்கப்பட்டது. கும்பகோணத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஸ்ரீதர் வாண்டையார் மொத்தம் 74,674 ஓட்டுகள் வாங்கிய நிலையில் திமுக வேட்பாளர் அன்பழகன் 96,057 ஓட்டுகள் பெற்று 21,383 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது இந்த தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் எம்கேஆர் அசோக் குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ அன்பழகனும், பாமக ராமதாஸ் அணியில் ஸ்டாலினும், நாம் தமிழர் சார்பில் ஆனந்தும், தவெக சார்பில் வினோத் என்பவரும் போட்டியிட்டுள்ளார்.

வேல்முருகனை தொடர்ந்து ஸ்ரீதர் வாண்டையார்

முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக சின்னமான உதயசூரியனில் வேல்முருகன் போட்டியிட்டு வென்றார். இந்த முறை 2 தொகுதிகளை அவர் கேட்டார். மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு உள்பட முக்கிய 10 கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கூறினார்.

இதனை திமுக ஏற்கவில்லை. இதனால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது பிற சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடர்ந்து இப்போது ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+