சமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் குறித்து பேசிய ஸ்டாலின்- கே எஸ் அழகிரி
Recommended Video
சென்னை: சமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் திரைப்படம் குறித்து ஸ்டாலினும் கேஎஸ் அழகிரியும் பேசினர்.
உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு குறித்து கே எஸ் அழகிரி வெளியிட்ட ஒரு அறிக்கை திமுக- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தர்பார் படம் பார்த்தீர்களா என ஸ்டாலின் கேட்டார். அதற்கு நான் பார்க்கவில்லை என்றேன். அவரோ நான் பார்த்துவிட்டேன். படம் நன்றாக இருக்கிறது என்றார்.

துக்ளக்
ரஜினி மிகவும் நல்லவர். அவர் துக்ளக் விழாவில் முரசொலியையும் துக்ளக்கையும் தொடர்புபடுத்தி பேசியது தவறு. ஒன்று துக்ளக் குறித்து மட்டும் அவர் பேசியிருக்கலாம்.

வாய்தவறி
இல்லாவிட்டால் முரசொலி குறித்து மட்டும் பேசியிருக்கலாம். இரண்டு குறித்தும் பேசியது தவறு. திரைப்படங்களில் வசனம் எழுதி கொடுத்து பேச சொல்வார்கள். ஆனால் இந்த விழாவில் அவர் சொந்தமாக பேசியதால் வாய் தவறி பேசியிருக்கலாம் என்றார்.

காங்கிரஸ்
சமாதானம் பேச வந்த இடத்தில் தர்பார் படம் குறித்து இரு தலைவர்களும் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஸ்டாலினின் கோபம் தணிந்துவிட்டதாகவே காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

திரைப்படம்
முரசொலி படிப்பவர்கள் திமுககாரர்கள் என்றும் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என ரஜினிகாந்த் கூறியிருந்ததற்கு முரசொலியில் தலையங்கம் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் திரைப்படம் குறித்து ஸ்டாலின் நல்ல விதமாக பேசியதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications