நிதியும் இல்லை நீதியும் இல்லை.. மக்கள் பார்த்துக்கிட்டே இருக்காங்க: பாஜக அரசு செயலால் ஸ்டாலின் கோபம்
சென்னை: மத்திய பாஜக அரசு, புயல் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாட்டிற்கு 276 கோடி ரூபாய் மட்டும் நிதி அறிவித்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 37,907 கோடி நிதி ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். திமுக எம்.பி டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியது.

மத்திய குழு அறிக்கை வந்ததும் சில நாட்களில் நிதி ஒதுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறி இருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புயல் வெள்ள நிவாரணமாக தமிழக அரசு சுமார் 38 ஆயிரம் கோடி நிதி கோரி இருந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள 276.10 கோடியை மட்டுமே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கான புயல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு 276 கோடி ரூபாய் மட்டும் அறிவித்துள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications