செந்தில் பாலாஜியை கைது செய்ய ஸ்கெட்ச்? முதல்வர் அவசர ஆலோசனை.. வழக்கு அடுத்து எப்படி போகும் தெரியுமா?
சென்னை: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறையின் பிடி இறுகுவதால் முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சர்ச்சைகள் அதிகரித்து வருவதால், அதன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை சோதனை நடத்த சென்ற போது, ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த விவகாரம் இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்திருக்காது என்பது முதல்வரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிய மெசேஜ் ஆகும்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்தது, பெண் அதிகாரியின் லேப்டாப் உள்ளிட்ட உடைமைகளை பறிக்க முயன்றது என செந்தில்பாலாஜி தம்பி அசோக் ஆதரவாளர்கள் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியதோடு, 2 நாட்களுக்கு முன்னர் அமித்ஷா சென்னை வந்த போது நிகழ்ந்த பவர் கட் என எல்லாமே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக திரும்பியுள்ளது.
கழுத்தைச் சுற்றிய பாம்பை போல் அமைச்சர் செந்தில்பாலாஜியை சுற்றி வளைக்க ஆரம்பித்துள்ளது அமலாக்கத்துறை. இந்த ரெய்டு படலம் இன்றோடு முடிவடையாது என்றும் அது இன்னும் நீளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆ.ராசா, கனிமொழி, ப.சிதம்பரம், என அமலாக்கத்துறையால் சிறைக்கு சென்ற அரசியல் பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அந்தளவுக்கு அமலாக்கத்துறையின் விசாரணையும், கெடுபிடியும் இருக்கும்.
இதனிடையே ரெய்டு முடிந்த பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்றும் அப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதாவது கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மிஸ்டர் கிளீன் இமேஜோடு ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ரெய்டுகள் குறித்து சற்று சீரியஸாகவே ஆலோசிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications